சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவியர் மயக்கம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
மேச்சேரி: சாப்பிடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், தனியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவியர் சிலர் மயக்கம் அடைந்தனர்.சேலம் மாவட்டம், மேச்சேரி, எம்.காளிப்பட்டியில் காவிரி பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அங்குள்ள விடுதி மாணவியர் சிலர், நேற்று மயக்கம் அடைந்தனர். இதுகுறித்து, மேச்சேரி எஸ்.ஐ., சாந்தி, உளவுப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேச்சேரி: சாப்பிடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், தனியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவியர் சிலர் மயக்கம் அடைந்தனர்.


சேலம் மாவட்டம், மேச்சேரி, எம்.காளிப்பட்டியில் காவிரி பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அங்குள்ள விடுதி மாணவியர் சிலர், நேற்று மயக்கம் அடைந்தனர். இதுகுறித்து, மேச்சேரி எஸ்.ஐ., சாந்தி, உளவுப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் மதியம் விடுதியில் சிக்கன் பரிமாறப்பட்டது. அதில் சில மாணவியருக்கு சிக்கன் இல்லாததால் வெளியே சென்று சாப்பிட்டனர். அத்துடன் விடுதி உணவு தரமாக இல்லை என, மாணவியர் அடிக்கடி குற்றம்சாட்டியும், கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. நேற்று காலை, கல்லூரி மேலாளரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, தரமான உணவு வழங்கினால் மட்டும் சாப்பிடுவோம் எனக்கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு சாப்பிடாததால் ராஜகுமாரி, கவியரசி, ஷீலா ஆகிய மாணவியர் மயக்கம் அடைந்தனர். ஷீலா, மேச்சேரியிலும், ராஜகுமாரி, கவியரசி, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, விடுதிக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்து, உயர் அகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X