சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நூதனமாக தப்பிய திருடன்: 'கோட்டை' விட்ட போலீஸ்

Added : நவ 23, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: திருட முயன்றவரை மக்கள் பிடித்த நிலையில், அவர் டிராக்டரில் முட்டி காயம் ஏற்படுத்திக்கொண்டதால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், பனமரத்துப்பட்டி - மல்லூர் போலீசார் எல்லை பிரச்னையால் தாமதிக்க, திருட முயன்றவர் தப்பிவிட்டார்.சேலம், பனமரத்துப்பட்டி, கோம்பைக்காட்டில் வெல்டிங் பட்டறை உள்ளது. அங்கு நேற்று காலை ஒருவர் புகுந்து, இரும்பு தளவாட

பனமரத்துப்பட்டி: திருட முயன்றவரை மக்கள் பிடித்த நிலையில், அவர் டிராக்டரில் முட்டி காயம் ஏற்படுத்திக்கொண்டதால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், பனமரத்துப்பட்டி - மல்லூர் போலீசார் எல்லை பிரச்னையால் தாமதிக்க, திருட முயன்றவர் தப்பிவிட்டார்.


சேலம், பனமரத்துப்பட்டி, கோம்பைக்காட்டில் வெல்டிங் பட்டறை உள்ளது. அங்கு நேற்று காலை ஒருவர் புகுந்து, இரும்பு தளவாட பொருட்களை தூக்கிச்செல்ல முயன்றார். காவலர் சத்தமிட, பட்டறை பணியாளர்கள், அவரை துரத்தி பிடித்தனர். அவர் பட்டறையில் இருந்த டிராக்டர் மீது பலமுறை தலையை முட்டி, நெற்றி, தலையில் காயம் ஏற்படுத்திக்கொண்டார். பனமரத்துப்பட்டி போலீசார், அவரை, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடம், மல்லூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் வருகிறது என, பனமரத்துப்பட்டி போலீசார் தெரிவித்தனர். இதனால், மல்லூர் போலீசார், அந்த நபரிடம் விசாரிக்க, நேற்று மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு அவரை காணவில்லை. சம்பவ இடம், பனமரத்துப்பட்டி போலீஸ் கட்டுப்பாட்டில் வரும் நிலையில், திருட முயன்றவரை பிடித்தும், எல்லை பிரச்னையை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தட்டிக்கழிப்பதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X