ஜெய்ப்பூர்: உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கள்ளக்காதலனின் மர்ம உறுப்பை துண்டித்த பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக வலைதளம்
ராஜஸ்தான் மாநிலம் சேர்ந்த 28 வயதான வாலிபர், யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான ரீமாவுக்கும் சமூக வலைதளம் வழியாக நட்பு ஏற்பட்டது. பின், இருவரும் நேரிடையாக சந்தித்தனர்; நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி தன்னுடைய வீட்டுக்கு வரும்படி வாலிபருக்கு ரீமா அழைப்பு விடுத்தார். இதையேற்று ரீமா வீட்டுக்கு வாலிபரும் வந்தார். இருவரும் உணவு சாப்பிட்டனர். பின், வாலிபருடன் அவரது வீட்டுக்கு ரீமா சென்று தங்கியுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் கடும் வலியால் அவதிப்பட்ட வாலிபர் எழுந்து பார்த்த போது, அவரது மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு ரீமா இல்லை. உடனடியாக ரீமாவை தொடர்பு கொண்டு, வாலிபர் தன் நிலையை கூறியுள்ளார். இதைக் கேட்டு வீட்டுக்கு வந்த ரீமா, வாலிபரை ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மூன்று நாள் சிகிச்சைக்கு பின், வாலிபர் கடந்த 19ம் தேதி, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இதன்பின், ரீமா மீது வாலிபர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ரீமாவை தேடி வருகின்றனர். இது பற்றி போலீசார் கூறியதாவது:
உண்மையான காரணம்
வாலிபரும், அந்தப் பெண்ணும் மிகவும் நெருங்கி பழகி வந்துஉள்ளனர். வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிஉள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள, வாலிபரை ரீமா வற்புறுத்தியுள்ளார். வாலிபர் மறுக்கவே, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரது மர்ம உறுப்பை ரீமா துண்டித்தது தெரிய வந்துள்ளது. எனினும், ரீமாவை கைது செய்த பின் தான், உண்மையான காரணம் தெரிய வரும். இவ்வாறு போலீசார் கூறினர்.