38. சைமன் குழு எதிர்ப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
1928ஆம் ஆண்டுதான் இன்னொரு சம்பவமும் நடந்தது. 1928 ஆம் ஆண்டு இந்தியர்கள் விடுதலை கோரிக்கை பற்றி அறிவதற்காக சைமன் என்பவரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை ஆங்கிலேய அரசு அனுப்பியது.அதில் ஒருவர் கூட இந்தியர்களாக இல்லை என்பதால் அந்தக் குழுவை காங்கிரஸ் எதிர்த்தது. 'சைமனே திரும்பிப்போ' என்ற கோஷம் நாடெங்கும் கேட்கத் தொடங்கியது. லாலா லஜபதிராய் தலைமையில் மாபெரும் ஊர்வலம்
38. சைமன் குழு எதிர்ப்பு

1928ஆம் ஆண்டுதான் இன்னொரு சம்பவமும் நடந்தது. 1928 ஆம் ஆண்டு இந்தியர்கள் விடுதலை கோரிக்கை பற்றி அறிவதற்காக சைமன் என்பவரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை ஆங்கிலேய அரசு அனுப்பியது.

அதில் ஒருவர் கூட இந்தியர்களாக இல்லை என்பதால் அந்தக் குழுவை காங்கிரஸ் எதிர்த்தது. 'சைமனே திரும்பிப்போ' என்ற கோஷம் நாடெங்கும் கேட்கத் தொடங்கியது. லாலா லஜபதிராய் தலைமையில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. ஆங்கிலேயர்கள் அசுரத்தனமாக, அரக்கத்தனமாக, குதிரைப் படைத் தாக்குதல் நடத்தினார்கள். நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். பலத்த அடிபட்டு காயம் பட்டார்கள். ஆனாலும், ஊர்வலத்தை தொடர்ந்தார்கள்.

லாலா லஜபதிராயும் தடியடி பெற்றார். அவரது தலையில் அடிபட்டு ரத்தம் பெருகியது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்ததும் போராட்டம் உத்வேகம் பெற்றது. நேதாஜி உட்பட அனைத்து தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி அந்த செயலை கண்டித்தார்கள்.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார் மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X