அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாறுபட்ட சிந்தாந்தம்; ஒருமித்த முகம்! பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேச்சு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை : தமிழகத்தின் இரண்டாவது மிக பெரிய நகரம் கோவை. நாட்டில் பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களுக்கு பெயர் பெற்ற நகரம். மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அரசு வருவதற்கு முன், பல்வேறு சமுதாய அமைப்புகள் ஓடோடி வந்து உதவக் கூடிய நகரத்துக்கு வந்திருக்கும் முதல்வருக்கு வணக்கங்கள்.ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நல திட்டங்களை செயலாற்றும்போது, மக்களோடு நெருக்கமாக

கோவை : தமிழகத்தின் இரண்டாவது மிக பெரிய நகரம் கோவை. நாட்டில் பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களுக்கு பெயர் பெற்ற நகரம். மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அரசு வருவதற்கு முன், பல்வேறு சமுதாய அமைப்புகள் ஓடோடி வந்து உதவக் கூடிய நகரத்துக்கு வந்திருக்கும் முதல்வருக்கு வணக்கங்கள்.

ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நல திட்டங்களை செயலாற்றும்போது, மக்களோடு நெருக்கமாக இருந்து, அவர்களது பிரச்னைகளை புரிந்து, ஆக்கப்பூர்வமாக வேகமாக பணியாற்றினால், மாறுபட்ட கருத்து, மாறுபட்ட சிந்தாந்தம் கொண்ட பல்வேறு கட்சிகள் கூட, ஒருமித்த முகத்தோடு பணியாற்றினால், மக்களுக்கான நலனை இன்னும் வேகமாக கொண்டு செல்லலாம்.
அரசின் திட்டங்கள் கோவை தெற்கு தொகுதிக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல, எம்.எல்.ஏ., என்ற முறையில் இம்மக்களுடைய குரலாய், முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.விழா நடக்கும் இடம் முதல் இன்னும் சுற்றுவட்டார பகுதிகள் வரை கடினமான மழை, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டதை புரிந்து கொள்ளலாம். அடிப்படை வசதியை மேம்படுத்த இன்னும் வரக்கூடிய நாட்களில் அதிக தீவிரத்தோடு இந்த அரசு இயங்க வேண்டும்.
இவ்வாறு, வானதி சீனிவாசன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X