அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் அறிவித்தார் செம்மொழி பூங்கா!

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை : 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியான செய்தியின் எதிரொலியாக, கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கோவையில் கடந்த 2010ல் செம்மொழி மாநாடு நடந்தபோது, முதல்வர் கருணாநிதி, கோவை மத்திய சிறையை இடம் மாற்றி விட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.


கோவை : 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியான செய்தியின் எதிரொலியாக, கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 2010ல் செம்மொழி மாநாடு நடந்தபோது, முதல்வர் கருணாநிதி, கோவை மத்திய சிறையை இடம் மாற்றி விட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். அரசாணையும் வெளியிடப்பட்டது. சிறை நுழைவாயில் பகுதியில் 'செம்மொழி பூங்கா' என்ற பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டது.இதன்பின், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளதால் அதே கோரிக்கை வலுத்து வந்தது.

இதுகுறித்து, நேற்று நமது நாளிதழில், 'கோவையில் சர்வதேச தரத்தில் செம்மொழி பூங்கா! கருணாநிதி அறிவிப்பை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, கோவை வ.உ.சி.,மைதானத்தில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''கோவை மத்திய சிறை இடம் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும். இதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; இரண்டு கட்டமாக இந்த பணி நடைபெறும்'' என்று அறிவித்துள்ளார்.

ரூ.200 கோடி ஒதுக்கீடு

கோவையில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள்:
கடந்த, 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விமான நிலைய விரிவாக்கத்துக்கு, ரூ.1,132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தி, செயல்படுத்தப்படும்.மக்களின் தேவையை அறிந்து நிறைவேற்ற, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சி பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை சீராக குடிநீர் வழங்கப்படும்.கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., ஆட்சிக்காலத்தில் திட்டச்சாலைகள் உருவாக்கப்பட்டன.

கடந்த ஆட்சியில் எந்த திட்டச்சாலையும் உருவாக்கப்படவில்லை. இப்பணியை மீண்டும் முடுக்கி விட உத்தரவிட்டிருக்கிறேன். 5 திட்டச்சாலைகள் உருவாக்க, குடியிருப்புகளில் சாலைகளை மேம்படுத்த, 200 கோடி ரூபாயில் பணிகள் துவக்கப்பட்டிருக்கின்றன.கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வெள்ளக்கிணறு, சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி பகுதிகளில், ரூ.380 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

கோவை மாநகராட்சியின் மையப்பகுதியில் உள்ள சிறைச்சாலை நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் நடைபாதை, உள்ளரங்கு, வெளியரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் செம்மொழிப்பூங்கா இரு கட்டங்களாக,. ரூ.200 கோடியில் அமைக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

மருத்துவ வசதிகள் மேம்படுத்த, ரூ.15.75 கோடியில், 63 நல வாழ்வு மையங்கள், 3 மருத்துவ ஆய்வு கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன. மாநகர பகுதியில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதியதாக தெருவிளக்குகள் அமைக்கப்படும். இப்பணிகளுக்கான அரசாணைகள் விரைவில் வெளியிட்டு, நிதி ஒதுக்கி, திட்டங்களை செயல்படுத்தி மக்களிடம் ஒப்படைப்போம்.

இவ்வாறு, அவர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X