புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் (நவ.,21) கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,488 ஆக குறைந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 7,579 பேர் மட்டுமே நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 543 நாளில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும்.
இந்தியாவில் நேற்றைய (நவ.,22) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.32 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.33 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (நவம்பர் 23) காலை 8 மணி நிலவரப்படி 117.63 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 71,92,154 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.