அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை : ''கோவை மாவட்டத்தில், 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது,'' என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.கோவை வ.உ.சி., மைதானத்தில், நேற்று நடந்த அரசு விழாவில் செந்தில் பாலாஜி பேசியதாவது:சென்னை மூழ்கும் என்றார்கள்; ஒவ்வொரு நாளும் சுற்றிச்சுழன்று, மக்களை காத்தவர் முதல்வர் ஸ்டாலின். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு,



கோவை : ''கோவை மாவட்டத்தில், 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது,'' என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

கோவை வ.உ.சி., மைதானத்தில், நேற்று நடந்த அரசு விழாவில் செந்தில் பாலாஜி பேசியதாவது:
சென்னை மூழ்கும் என்றார்கள்; ஒவ்வொரு நாளும் சுற்றிச்சுழன்று, மக்களை காத்தவர் முதல்வர் ஸ்டாலின். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கொடுத்திருக்கிறார்.மகளிருக்கு திட்டங்கள்; மாணவர்களுக்கு திட்டங்கள்; தொழில்துறையினருக்கு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் நம் முதல்வர் ஸ்டாலின். உறக்கமின்றி யோசிக்கிறார்; யோசிப்பதையே உறக்கமின்றி செயல்படுத்துகிறார். இது, சாமானியரின் அரசு. ஏழைகளின் காப்பாளனும் இவரே; சமூக நீதி காவலனும் இவரே. 10 ஆண்டுகள் பார்த்திருந்த தமிழகம், தனக்கான தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
கோவை மாநகராட்சியில், 100 இடங்கள், புறநகரில் 50 இடங்களில், 'மக்கள் சபை' நிகழ்ச்சி நடத்தினோம்; ஒரு லட்சத்து, 41 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. சென்ற இடமெல்லாம் கூட்டம். முதல்வர் ஸ்டாலினிடம் சொன்னோம். தீர்வு காணுங்கள்; நேரில் வருகிறேன் என்றார்.முதல்கட்டமாக, 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்படுகிறது. ஒவ்வொரு துறையின் குறையையும் களைவோம். இது, கோவை மக்களுக்கான திருநாள். ஸ்டாலின் ஆட்சியில் கோவை செழிக்கிறது.இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக இருக்கிறார். கோவை எந்நாளும் முதல்வருக்கு அசைக்க முடியாத கோட்டையாக இருக்கும்.
இவ்வாறு. அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

முதல்வர் புகழாரம்
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''22ம் தேதி, கோவைக்கு வர வேண்டுமென, அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சி நடத்தப் போகிறேன் என்றார்; இது, நிகழ்ச்சி அல்ல; மாநாடு. அவரை பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட வழங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் முழு வெற்றி பெற்றுள்ள செந்தில் பாலாஜி, துணை நின்ற மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களையும் மனதார பாராட்டுகிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X