சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அடுத்த பிடமனேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர், 37. இவர், பெருந்துறையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இலக்கியா, 33. இவர்களுக்கு, 11 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் உள்ளனர். விடுமுறை நாட்களில் சந்திரசேகர், பிடமனேரியிலுள்ள தன் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த, 20ல் இலக்கியா தன் இரு குழந்தைகளுடன்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த பிடமனேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர், 37. இவர், பெருந்துறையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இலக்கியா, 33. இவர்களுக்கு, 11 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் உள்ளனர். விடுமுறை நாட்களில் சந்திரசேகர், பிடமனேரியிலுள்ள தன் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த, 20ல் இலக்கியா தன் இரு குழந்தைகளுடன் வீட்டிலிருந்து மாயமானதாக, இலக்கியாவின் தாய் ருக்மணி, 60, சந்திரசேகருக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சந்திரசேகர் புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார், குழந்தைகளுடன் மாயமான இலக்கியாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X