பொது செய்தி

தமிழ்நாடு

800 விதை தரமற்றவை பரிசோதனையில் 'பளிச்'

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை : ''கோவை விதை பரிசோதனை நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசோதனை செய்யப்பட்ட விதைகளில், 800 விதைகள் தரமற்றவை என,'' விதைப்பரிசோதனை அலுவலர் நிர்மலா தெரிவித்துள்ளார்.கோவை தடாகம் ரோட்டில் செயல்படும் விதைப்பரிசோதனை மையத்தின் அலுவலர் நிர்மலா கூறியதாவது:விவசாயிகள் தங்கள் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு முன்பு பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். விதையின் தரம்


கோவை : ''கோவை விதை பரிசோதனை நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசோதனை செய்யப்பட்ட விதைகளில், 800 விதைகள் தரமற்றவை என,'' விதைப்பரிசோதனை அலுவலர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை தடாகம் ரோட்டில் செயல்படும் விதைப்பரிசோதனை மையத்தின் அலுவலர் நிர்மலா கூறியதாவது:

விவசாயிகள் தங்கள் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு முன்பு பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். விதையின் தரம் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும்.விதை விற்பனையாளர்கள், பரிசோதனை செய்த விதைகளை மட்டுமே விற்பனை செய்யவேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் இருக்க வேண்டும். நெல்லுக்கு, 80, மக்காச்சோளம், 90, பயறுவகை பயிர்களுக்கு, 75, எண்ணெய் வித்து பயிர்களுக்கு, 70 முதல், -80, காய்கறி பயிர்களுக்கு, 60 முதல், 75 சதவீதம் இருக்க வேண்டும்.
விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள விதைகளை கோவை விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து, பரிசோதனை செய்து முளைப்புத்திறனை அறிந்து கொள்வது அவசியம்.இந்த இரண்டு ஆண்டுகளில் பரிசோதனை செய்யப்பட்ட விதைகளில் 800 விதைகள் தரமற்றவை என, கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X