பாதை ஆக்கிரமிப்பை அகற்றாததை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதை ஆக்கிரமிப்பை அகற்றாததை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

Added : நவ 23, 2021
Share
தர்மபுரி: அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பஞ்., பறையப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ரமாசெல்வி, 40. இவர்களுக்கு சொந்தமாக இப்பகுதியில், மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதற்கு பொதுப்பாதை உள்ளது. அதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, ரமாசெல்வி, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து அதிகாரிகள், பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் ஒட்டினர். ஆனால்,

தர்மபுரி: அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பஞ்., பறையப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ரமாசெல்வி, 40. இவர்களுக்கு சொந்தமாக இப்பகுதியில், மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதற்கு பொதுப்பாதை உள்ளது. அதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, ரமாசெல்வி, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து அதிகாரிகள், பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, வருவாய்த்துறை அலுவலர்களின் கவனத்துக்கு மீண்டும் ரமாசெல்வி கொண்டு சென்றும், அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரக்தியடைந்த ரமாசெல்வி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையினரை கண்டித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு, தர்மபுரி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X