பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 25,123 பேருக்கு ரூ.646.61 கோடி நலத்திட்ட உதவி

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை : கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்த விழாவில், 587.91 கோடி ரூபாய்க்கு முடிவுற்ற, 70 திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்புக்கு, 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின், 25 ஆயிரத்து, 123 பயனாளிகளுக்கு, 646.61 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.புதிய திட்டங்கள் என்னென்ன? ரூ.56.81 கோடியில் சங்கனுார் பள்ளம் மேம்பாடு மற்றும்



கோவை : கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்த விழாவில், 587.91 கோடி ரூபாய்க்கு முடிவுற்ற, 70 திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்புக்கு, 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின், 25 ஆயிரத்து, 123 பயனாளிகளுக்கு, 646.61 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

புதிய திட்டங்கள் என்னென்ன?

 ரூ.56.81 கோடியில் சங்கனுார் பள்ளம் மேம்பாடு மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பூங்கா அமைத்தல், மேம்படுத்துதல்.
 ரூ.14.37 கோடியில் கிணத்துக்கடவு - வரட்டாற்றின் குறுக்கே தடுப்பணை,
 மேட்டுப்பாளையம் - தேக்கம்பட்டியில் 'ஓவிசி அணைக்கட்டு, பாசனக்கால்வாய் புனரமைப்பு, ், அன்னுார் வட்டம், சர்க்கார் சாமக்குளத்தை புனரமைப்பு செய்யப்படும்.
 கிணத்துக்கடவு, சூலுார், சர்க்கார் சாமக்குளம், தொண்டாமுத்துார், பொள்ளாச்சி வடக்கு, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னுார், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களில், ரூ.12.99 கோடியில் புதிய கட்டடங்கள், தடுப்பணைகள், சாலைகள்.
 ரூ.4.39 கோடியில் கோவையில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம், பதிவுத்துறை தலைவர் முகாம் அலுவலகம்.
 சர்க்கார் சாமக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.46 லட்சத்தில் புதிய கட்டடம்.
 போத்தனுார் செட்டிபாளையம் - நேரு நகர் பகுதியில், ரூ.36.75 லட்சத்தில் தார் சாலை, வடிகால் அமைத்தல்.
 பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு ரூ.33 லட்சத்தில் கட்டடம்.முடிவுற்ற பணிகள்
 ரூ.522 கோடி மதிப்பில் கவுண்டம்பாளையத்தில் கட்டியுள்ள அரசு அலுவலர்களுக்கான பன்னடுக்கு வாடகை குடியிருப்பு.
 மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடம், அரசு சட்டக்கல்லுாரி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை, ஆடிட்டோரியம் மற்றும் நுாலகம், கால்நடை மருத்துவ கட்டடம், ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டடம், சார்பதிவாளர் அலுவலகம்.
 ரூ.2.56 கோடியில் மதுக்கரை வட்டம், பிச்சனுார், மஞ்சு பள்ளம் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள், உப்புகண்டி குளம், அன்னுார் குளம், குன்னத்துார் குளம் ஆகியவற்றை சீரமைத்தல், புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, முதல்வர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X