சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதல் விவகாரத்தில் விபரீதம்: மேஸ்திரி கொலை; இருவர் கைது

Added : நவ 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே என்.பி.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 52, கட்டட மேஸ்திரி; இவரது முதல் மனைவி ரத்தினம்மா, 45. லட்சுமணனின் தம்பி இறந்து விடவே, மூன்று குழந்தைகளுடன் இருந்த அவரது மனைவி காவேரி, 41, என்பவரை லட்சுமணன் இரண்டாவது திருமணம் செய்து தனியாக குடி வைத்திருந்தார். கட்டட வேலைக்கு சென்று வந்த காவேரிக்கும், ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்த கட்டட மேஸ்திரி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே என்.பி.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 52, கட்டட மேஸ்திரி; இவரது முதல் மனைவி ரத்தினம்மா, 45. லட்சுமணனின் தம்பி இறந்து விடவே, மூன்று குழந்தைகளுடன் இருந்த அவரது மனைவி காவேரி, 41, என்பவரை லட்சுமணன் இரண்டாவது திருமணம் செய்து தனியாக குடி வைத்திருந்தார். கட்டட வேலைக்கு சென்று வந்த காவேரிக்கும், ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்த கட்டட மேஸ்திரி சதீஷ், 32, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், காவேரியுடன் சென்னை சென்ற சதீஷ், ஒரு மாதத்துக்கு பின் திரும்பி, வசந்த் நகரில் தனியாக வீடு எடுத்து வசித்தனர். தட்டிக்கேட்ட லட்சுமணனை, சதீஷ் மிரட்டியுள்ளார். இதனால் லட்சுமணன், தன் நண்பரான ஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்த டிரைவர் மகேந்திரன், 38, என்பவரிடம் நடந்த விபரத்தை கூறினார். நேற்று முன்தினம் மேஸ்திரி சதீஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்த இருவரும், அவருக்கு போன் செய்து வரவழைத்து மது வாங்கி கொடுத்தனர். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு என்.பி.அக்ரஹாரம் செல்லும் சாலைக்கு சென்றனர். இரவு, 11:30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், பைக்கை நிறுத்தி விட்டு, போதையில் இருந்த சதீஷின் கைகளை லட்சுமணன் பிடித்து கொள்ள, மதுபாட்டிலை உடைத்து தொண்டையில் மகேந்திரன் குத்தினார். மேலும், அவரது நெற்றியில் கல்லால் தாக்கியதில், சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலின்படி நேற்று காலை கொலை வழக்குப்பதிவு செய்த ஓசூர் டவுன் போலீசார், லட்சுமணன் மற்றும் மகேந்திரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
23-நவ-202111:47:18 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் "அவருக்கு போன் செய்து வரவழைத்து மது வாங்கி கொடுத்தனர். " தன்னுடைய கள்ளக்காதலை எதிர்க்கிறார்கள் என்று தெரிந்தும் அவர் எப்படி அவர்கள் வாங்கிக்கொடுத்த மதுவை குடித்தார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X