இன்று சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலம்

Updated : நவ 24, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் 96 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசாந்தி நிலையத்தின் பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. தொடர்ந்து ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. சத்ய சாய் டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றினர்.இந்த நிகழ்ச்சியில்
sathyasaibaba, sathya saibaba, சத்யசாய்பாபா, சாய்பாபா

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் 96 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரசாந்தி நிலையத்தின் பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. தொடர்ந்து ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. சத்ய சாய் டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள், சத்யசாய்பாபா மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவரிடம் ஆசி பெறவும் சாய் சன்னதியில் ஒன்று கூடினர்.


சத்ய சாய்பாபா 96வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் | Sai Baba 96th Birth Day | Dinamalar |

latest tamil news





கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாரம்பரிய ரத்தோத்ஸவம் திருவிழா மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சத்தியநாராயண பூஜை ஆகியவை இன்று பிரசாந்தி நிலையத்தில் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளை https://www.youtube.com/channel/UC5j7MGcyU9wh15gbkvNO3aw என்ற பிரசாந்தி நிலையத்தின் யூ டியூப் சேனல் மற்றும் sri sathya saibaba என்ற பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் காணலாம்.



latest tamil news


Advertisement


1926, நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கடப்ப ராஜு - ஈஸ்வரம்மா தம்பதியரின் மகனாக சத்ய சாய்பாபா பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.

1940, மார்ச் 8: சாய்பாபா தனது 14வது வயதில், புட்டபர்த்திக்கு அருகே உள்ள உரவகொண்டா என்ற இடத்தில் தேள் கடித்து மயக்கமடைந்தார். மயக்கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தார், அழுதார், பாடினார். அவரது செயல்கள் புரியாத புதிராக இருந்தன. அன்று முதல் அவரது வாழ்க்கை திசை மாறியது என்கிறார் அவரது சகோதரர் சீஷம்மா ராஜு.


latest tamil news


1940, மே 23: சாய்பாபா தனது பெற்றோர், சகோதரர்களை அழைத்தார். அனைவரின் முன்னிலையில் காற்றிலிருந்து இனிப்பு, விபூதி உள்ளிட்ட பொருட்களை வரவழைத்து கொடுத்தார். தனது மகனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று நினைத்து பிரம்பை எடுத்து, 'யார் நீ, உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார். அதற்கு சாய்பாபா, 'நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்' என்றார். அன்று முதல் சத்யநாராயண ராஜு, சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.


latest tamil news




19 44: சாய்பாபா, குடும்பத்தில் இருந்து பிரிந்து புட்டபர்த்தி அருகே கட்டப்பட்டுள்ள கோயிலில் வசிக்கத் தொடங்கினார். ஆன்மிக பயணமாக பெங்களூருக்கு சென்றார். தூய வெள்ளை நிறத்தில் நீண்ட சட்டை மற்றும் வேஷ்டி கட்டியிருந்தார். பின்னர் காவி உடைக்கு மாறினார்.


latest tamil news


1950, நவம்பர் 23: புட்டபர்த்தியில் 'பிரசாந்தி நிலையம்' என்ற பிரமாண்ட ஆசிரமம் கட்டி, சாய்பாபா தனது 28வது பிறந்த நாளில் திறந்து வைத்தார்.

1957, அக்டோபர்: பிரசாந்தி நிலைய வளாகத்தில் இலவச மருத்துவமனையை திறந்தார்.


1968, ஜூன் 29: சாய்பாபா, முதன் முதலாக ஆன்மிக பயணமாக நமிபியா, உகாண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

1968, ஜூலை 22: ஆந்திர மாநிலம், அனந்தபூரில் மகளிர் கல்லூரியை திறந்து வைத்தார்.

1968: மும்பையில் ஆன்மிகம் மற்றும் சமுக சேவைக்காக தர்மஷேத்ரா அல்லது சத்யம் மந்திர் ஒன்றை நிறுவினார்.

1972: ஆன்மிக மற்றும் சமுக பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டை நிறுவினார்.


latest tamil news




1973: ஐதராபாத்தில் சிவம் மந்திர் நிறுவினார்.

1981, நவம்பர் 22: புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

1981: சென்னையில் சுந்தரம் மந்திர் நிறுவப்பட்டது.

1993, ஜூன் 6: பாபாவின் படுக்கை அறைக்குள் திடீரென மர்ம நபர்கள் நுழைந்து அவரை தாக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும், ஆசிரமத்தின் தொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆசிரம தொண்டர்கள் 2 பேரும் பலியானார்கள்.

1995, மார்ச்: ஆந்திர மாநிலத்தில் வறண்ட பிரதேசமாக ராயலசீமா பகுதியில் சுமார் 12 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மெகா குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார்.

1999: மதுரையில் ஆனந்த நிலையம் மந்திர் நிறுவினார்.
2001: ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பெங்களூரில் நவீன பல்நோக்கு மருத்துவமனையை நிறுவினார்.

2005: உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி, அருளாசி வழங்கத் தொடங்கினார்.

2006: இரும்பு நாற்காலி ஒன்று விழுந்ததில் சாய்பாபாவின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.

2011, மார்ச் 28: மூச்சு திணறல் காரணமாக, புட்டபர்த்தியில் உள்ள நவீன மருத்துவமனையில் சத்ய சாய்பாபா சேர்க்கப்பட்டார்.

2011, ஏப்ரல் 24: ஞாயிற்றுக்கிழமை காலை 6.25 மணியளவில் சத்ய சாய்பாபா ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆசிரமத்தில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க : https://www.youtube.com/channel/UC5j7MGcyU9wh15gbkvNO3aw





Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
23-நவ-202119:06:34 IST Report Abuse
S. Narayanan சாய் பாபாவின் அருமை பெருமைகளை அறியாதவர்கள் அவரை பலவாறு தூற்றினர். இவை எதையும் பொருட்படுத்தாத அவர் உலக மக்கள் நல்வாழ்வுக்காக நிறைய பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை எல்லாம் புட்டபர்த்தியில் பெங்களூரில். நிறுவி இருக்கிறார். உலகின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் இலவசமாக சிகிச்சை பெறுகின்றனர். அவரை தரிசிக்க உலகம் முழ்வாதும் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து ஆசி பெறுகின்றனர். மக்கள் தங்க மிக குறைந்த விலையில் வசதி செய்து இருக்கிறார். பாபாவின் ஆசி உலக மக்கள் எல்லோருக்கும் சாதி மத வேறுபாடின்றி கிடைக்கவேண்டும் என்று அவர் பக்தர்கள் விரும்புகிறார்கள். ஓம் ஸ்ரீ சாய் ராம்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
23-நவ-202115:08:50 IST Report Abuse
raja இவரு வாயிலிருந்து லிங்கம் எடுத்து கொடுத்ததை பய பக்கியோட வாங்கிய பகுத்தறிவு வாத்து கட்டுமரம் குடும்பம் இன்னும் அதை பெருமையா சொல்லறானுவோ....
Rate this:
Vijay - Houston,யூ.எஸ்.ஏ
23-நவ-202119:53:03 IST Report Abuse
Vijayஅனைவருக்கும் வணக்கம், நமக்கு நம்பிக்கை இல்லாததையும் புரியாததையும் பற்றி பேசுவதையும் எழுதுவதையும் தவிர்க்க வேண்டும். தெய்வீகம் ஆராயமுடியாதது. அனுபவித்தால் மட்டுமே புலப்படும். ஜெய் ஸாயீராம்...
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-நவ-202111:58:33 IST Report Abuse
s t rajan சாதி மதங்களை கடந்து சகலரும் இறை வழிபாட்டில் மட்டுமின்றி பொதுத் தொண்டிலும் சிறந்து விளங்க வழி காட்டிய மகான். சர்வ மத ப்ரார்த்தனை மூலம் உலகை ஒரு "அன்பு" என்னும் மதத்தின் கீழ் இணைத்த அற்புதர். நாத்தீகம் பேசியோரையும் தன் பால் ஈர்த்த தனிப் பெரும் யுக புருஷர், ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X