சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டுவெடிப்பு கைதி இறப்பு: மனைவி போலீசில் புகார்

Added : நவ 23, 2021
Share
Advertisement
போத்தனுார் : கோவையில் குண்டுவெடிப்பு கைதி இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை ஆத்துபாலம், குறிச்சி பிரிவு- போத்தனுார் பிரதான சாலையில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சுலைமான், 61. இவர் ஆடுகள் வளர்த்து வரும் நிலையில், அதில் ஒன்றை, ஒருவர் திருடி, ஆட்டோவில் எடுத்து செல்வதை கண்டார். சுலைமான் மற்றும் மகன்கள் முகமது, இப்ராஹிம் ஆகியோர் ஆட்டோவை துரத்தி சென்றனர். சாரதா

போத்தனுார் : கோவையில் குண்டுவெடிப்பு கைதி இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை ஆத்துபாலம், குறிச்சி பிரிவு- போத்தனுார் பிரதான சாலையில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சுலைமான், 61. இவர் ஆடுகள் வளர்த்து வரும் நிலையில், அதில் ஒன்றை, ஒருவர் திருடி, ஆட்டோவில் எடுத்து செல்வதை கண்டார். சுலைமான் மற்றும் மகன்கள் முகமது, இப்ராஹிம் ஆகியோர் ஆட்டோவை துரத்தி சென்றனர். சாரதா மில் ரோட்டில் இறைச்சி கடை நடத்தும் நுார்முகமது கடை முன் ஆட்டோ நிற்பதை கண்டனர்.

அங்கிருந்த பாரதி நகரை சேர்ந்த சேட் பக்ருதீன், நுார்முகமது ஆகியோரிடம், இவர்கள் கேள்வி எழுப்பியதும், நுார்முகமது ஆட்டை திரும்ப கொடுத்துள்ளார். சுலைமான் அளித்த புகாரின் படி, போத்தனுார் போலீசார் நுார்முகமது கடைக்கு சென்ற போது, சேட் பக்ருதீனை காணவில்லை. திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீசார் கைப்பற்றினர்.

இந்நிலையில், காலை, 10:30 மணியளவில், கோவை அரசு மருத்துவமனையில், நினைவிழந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்த போது, அந்நபர், சேட் பக்ருதீன் என தெரிந்தது; மதியம், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.அவரது மனைவி ஜீனத் நிஷா, தனது கணவரை யாரோ தாக்கியதால், உயிரிழந்துவிட்டதாக, போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, சுலைமான், இறைச்சி கடை நடத்தும் நுார்முகமது ஆகியோரிடம் விசாரித்தனர். தலைமறைவான முகமது, இப்ராஹிம் ஆகியோரை தேடுகின்றனர்.

இறந்த சேட் பக்ருதீன், கோவை குண்டுவெடிப்பு வழக்கில், 47வது குற்றவாளி. 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன், இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X