பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மழை பொழிவுக்கு காத்திருக்கும் விவசாயிகள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சதவீதம் என்ற அளவில் மட்டுமே கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் அதிக மழை பொழிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.,முதல் வாரம் முதல் 12 வரை ஓரளவிற்கு மழை பெய்தது. இரண்டு மூன்று நாட்கள் மேக மூட்டத்துடன் சிறு சாரல் மழை பெய்தது. தாழ்வானபகுதிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கின.அதே நேரம்


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சதவீதம் என்ற அளவில் மட்டுமே கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் அதிக மழை பொழிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.,முதல் வாரம் முதல் 12 வரை ஓரளவிற்கு மழை பெய்தது. இரண்டு மூன்று நாட்கள் மேக மூட்டத்துடன் சிறு சாரல் மழை பெய்தது. தாழ்வானபகுதிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கின.அதே நேரம் பலத்த மழை இன்னும் பெய்யாததால் மாவட்டத்தில் கண்மாய்கள், குளங்கள் நிரம்பவில்லை. ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வைகை அணையின் கீழ் பாசனத்தில் உள்ள 500 பொதுப்பணித்துறை கண்மாய்களில் இதுவரை 30 கண்மாய்கள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. 111 கண்மாய்களில் 75 சதவீதம் நீர் உள்ளது. 51 முதல் 75 சதவீதம் வரை 151 கண்மாய்களில் நீர் உள்ளது. 103 கண்மாய்களில் 26 முதல் 50 சதவீதம்தண்ணீர் உள்ளது. 25 சதவீதத்திற்கும் குறைவாக 105 கண்மாய்கள் உள்ளன.இதேபோல் குண்டாறு கோட்டத்தில் உள்ள 141 பொதுப்பணித்துறை கண்மாய்களில் 1 மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளது.

50 கண்மாய்களில் 26 முதல் 50 சதவீதம் வரையிலும், 9 கண்மாய்களில் 75 சதவீதமும், 81 கண்மாய்களில் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள 1122 குளங்களில் ஒன்று மட்டுமேமுழுமையாக நிரம்பியுள்ளது. 589 குளங்களில் 50 சதவீதம் வரையிலும், 173 குளங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 3897 ஊரணிகளில் 18 மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன.

இதன்படி 5660 நீர் நிலைகளில் 50 மட்டுமே முழுமையாக நிரம்பியதால் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அதிகளவு மழை பெய்தால் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணமுடியும், என்பதால் விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X