சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணத்துக்கு வற்புறுத்திய பெண்ணை கொலை செய்த மேற்பார்வையாளர் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஈரோடு : திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணை, கொலை செய்து மூட்டை கட்டி வீசிய, கட்டுமான பணி மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, ரங்கம்பாளையம் கே.கே.நகர் பகுதியில், கடந்த 12ம் தேதி சாக்கு மூட்டை கிடந்தது. அதில், ஒரு பெண் உடல் இருந்தது. விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த ஜெயலட்சுமி, 39, என்பது தெரிந்தது.'சிசிடிவி' கேமரா
திருமணத்துக்கு வற்புறுத்திய பெண்ணை கொலை செய்த மேற்பார்வையாளர் கைது


ஈரோடு : திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணை, கொலை செய்து மூட்டை கட்டி வீசிய, கட்டுமான பணி மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, ரங்கம்பாளையம் கே.கே.நகர் பகுதியில், கடந்த 12ம் தேதி சாக்கு மூட்டை கிடந்தது. அதில், ஒரு பெண் உடல் இருந்தது. விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த ஜெயலட்சுமி, 39, என்பது தெரிந்தது.'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கட்டட பணி மேற்பார்வையாளர் யோகநாதன், 49, என்பவரை கைது செய்தனர்.

யோகநாதன் வாக்குமூலம்:
ஏற்கனவே இரு பெண்களை திருமணம் செய்தேன். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இதனால், திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தேன். அவர்கள், ஜெயலட்சுமி மொபைல் எண்ணை தந்தனர்.அவரிடம் பேசியபோது, 'கோவையில் ஒரு முதியவரை பராமரித்து வரும் வேலை செய்கிறேன். கணவர் இறந்து விட்டார். மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்' என்றார்.

அவரை பார்த்ததும், எனக்கு பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ள மறுத்தேன்.அவர், 'இன்று ஒருநாள் மட்டும் உங்கள் வீட்டில் தங்கி விட்டு, மறுநாள் சென்று விடுவேன்' என்றார். இதனால் 8ம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தேன். மறுநாள், 'என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல், 10 சவரன் நகை தரவேண்டும்' என மிரட்டினார்.

இதனால், தொடர்ந்து வீட்டில் தங்க வைத்தேன். 11ம் தேதி, மீண்டும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது மறுத்தேன். அக்கம் பக்கத்தினரிடம் தெரிவிப்பதாக சொல்லி ஓடினார். தடுத்து கையால் அடித்தபோது மயங்கி விழுந்தார். பின், கழுத்தை காலால் மிதித்ததில் இறந்து விட்டார். உடலை சாக்கில் போட்டு மூட்டை கட்டி, பைக்கில் எடுத்து சென்று குடியிருப்பு பகுதி காலியிடத்தில் வீசினேன்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X