வார்டு ரவுன்ட் அப் : விளாங்குடி

Added : நவ 23, 2021
Share
Advertisement
மதுரை : கரடு, முரடான ரோடு, தெரு எங்கும் சிதறி கிடக்கும் குப்பை, நாய்கள் தொல்லை என அடுக்கடுக்கான பல்வேறு பிரச்னைகளால் மதுரை மாநகராட்சி 8வது வார்டு விளாங்குடி குடியிருப்போர் பல ஆண்டுகளாக தவிக்கின்றனர். இப்பகுதி தெருக்களில் ஆங்காங்கு பிளாஸ்டிக்குடிநீர் தொட்டிகள் உள்ளன. அதன் கீழே கழிவுநீர் தேங்கி சுகாதாரகேடு நிலவுகிறது. தார் ரோடுகள் பெயர்ந்து கரடு, முரடாக மாறியுள்ளன.
வார்டு ரவுன்ட் அப் : விளாங்குடி


மதுரை : கரடு, முரடான ரோடு, தெரு எங்கும் சிதறி கிடக்கும் குப்பை, நாய்கள் தொல்லை என அடுக்கடுக்கான பல்வேறு பிரச்னைகளால் மதுரை மாநகராட்சி 8வது வார்டு விளாங்குடி குடியிருப்போர் பல ஆண்டுகளாக தவிக்கின்றனர். இப்பகுதி தெருக்களில் ஆங்காங்கு பிளாஸ்டிக்குடிநீர் தொட்டிகள் உள்ளன. அதன் கீழே கழிவுநீர் தேங்கி சுகாதாரகேடு நிலவுகிறது. தார் ரோடுகள் பெயர்ந்து கரடு, முரடாக மாறியுள்ளன. மழை காலங்களில் ரோட்டிலுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கிறது. நாய்கள், மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக திரிகின்றன.

நடக்க முடியாதளவிற்கு ரோடு

பஞ்சவர்ணம், மீனாட்சி நகர்: இங்கு ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளதால் நடக்க முடியவில்லை. தெருவில் பொது குடிநீர் குழாய்கள் இல்லாததால் பணம் கொடுத்து வாங்குகிறோம். சிறு மழை பெய்தாலே ரோடு குளமாக மாறி விடுகிறது. மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றின் கழிவுகளால் கொசுக்கள் பெருகி நோய் பரவும் அபாயம் உள்ளது.
குவியும் குப்பையால்நாற்றம்
தமிழரசி, விளாங்குடி: சுற்றியுள்ள தெருக்களில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டி எடுத்த மண்ணை காலி பிளாட்டுகளில் குவித்துள்ளனர். மழை பெய்யும் போது இந்த மண் கரைந்து தெருவில் தேங்கி சகதியாகிறது. சில தெருக்களில் மின் விளக்குகள் எரியவில்லை. பெரியார் நகர் 1வது தெரு உட்பட சில தெருக்களில் குப்பை சிதறி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. முட்புதர்களுக்குள் நாய்கள் கூடி சண்டையிட்டு கடிக்க பாய்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள்இப்பகுதி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X