புதுடில்லி: உ .பி., உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.

உ பி., பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு 2022 மார்ச் மாதத்திற்குள் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன. மேலும் இம்மாநில தேர்தல் பணிகள், மின்னணு இயந்திரம், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன குறித்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்க தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

இதன் முதல் கட்டமாக இன்று டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளனர். இந்த கூட்டத்தில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் அமைதியான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பபடும்.