பொது செய்தி

இந்தியா

மழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
பெங்களூரு: மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என மோடி உறுதி அளித்ததாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை மீறி பெய்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால், ஏரி, குளம்,
karnataka, primeminister, chiefminister, rain,

பெங்களூரு: மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என மோடி உறுதி அளித்ததாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை மீறி பெய்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால், ஏரி, குளம், கட்டை, ஓடைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், பல பகுதிகளில் கடும் பாதிப்புக்குள்ளானது. தலைநகர் பெங்களூருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகள், டிராக்டர்கள் வாயிலாக குடிநீர், பிஸ்கட் , பன், வாழைப்பழம், மெழுகுவர்த்தி, பால் ஆகியவற்றை வழங்கினர். மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். பெங்களூரு, கோலார், சிக்பல்லாபூர், ராமநகர், துமகுரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


latest tamil news
பிரதமர் ஆலோசனை


இதனிடையே, பசவராஜ் பொம்மையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.இது தொடர்பாக பசவராஜ் பொம்மை கூறியதாவது:
மழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், பயிர் பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
23-நவ-202117:49:57 IST Report Abuse
Easwar Kamal என்ன கர்நாடகாவுக்கு அல்லி கொடுங்க தமிழ்நாட்டுக்கு கிள்ளி கொடுங்க. அதுதானே வேற என்ன
Rate this:
Cancel
Karunanidhi - Madurai,இந்தியா
23-நவ-202117:31:28 IST Report Abuse
Karunanidhi Our Gujarat and UP PM will not give proper relief to southern states. He feel he is only PM for Gujarat and UP. Time for all the non UP and Gujarat people to Indian PM rather than regional PM
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-நவ-202117:28:45 IST Report Abuse
NicoleThomson இங்கே தமிழகம் கருநாடக என்று பிரித்து எழுதும் அறிஞர் அண்ணன்கள் க்கு ஒரு வேண்டுகோள் எந்த மாநிலமாயினும் அங்கே வாடுவது விவசாயிகளே உங்களை போன்று நாளை நீர் வடியும் நாளை மறுநாள் உங்களது வாழ்க்கை சகஜமாகிவிடும் ஆனால் விளைவித்த பயிர்கள் அழுகி போயி கிடப்பதை பார்க்கும் விவசாயிக்கு மொழி தெரியாது அவர்களின் வலி கூட புரியாம ஏச்சு பேசும் இடமாகி விட்டதே , தப்பி பிழைத்த தக்காளிக்கு கிடைத்த விலை போதும் என்று விற்ற எனக்கு தெரியும் இடைத்தரகள் /ஏஜெண்டுகள் போன்று கேடு கேட்ட வர்க்கத்திற்கு தான் உங்கள் ஆதரவு என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X