சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் வழங்க எதிர்ப்பு: ஆழியாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஆனைமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் இன்று (23ம் தேதி) காலை, ஆழியாறு புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல உத்தேசித்துள்ள திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஆழியாறு ஆற்றிலிருந்து ஓட்டன்சத்திரம் பகுதிக்கு
ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் வழங்க எதிர்ப்பு: ஆழியாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆனைமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் இன்று (23ம் தேதி) காலை, ஆழியாறு புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல உத்தேசித்துள்ள திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஆழியாறு ஆற்றிலிருந்து ஓட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல உத்தேசித்துள்ள திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஆழியார் புதிய ஆயக்கட்டு (44,380 ஏக்கர்) மற்றும் பழைய ஆயக்கட்டு (6,400 ஏக்கர்) பகுதிகள் விஸ்தீரணம் செய்யப்படவில்லை.

மாறாக, பாலாறு படுகையில் ஆயக்கட்டு விஸ்தீரணம் செய்யப்பட்ட, (1,75,000 ஏக்கர்) காரணத்தாலும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாததாலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதிக்கு நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது ஒட்டுமொத்த பி.ஏ.பி., திட்டத்தையே முடங்கச்செய்யும்.

இந்தாண்டு புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, 2,880 மில்லியன் கன அடி நீர் வழங்க வேண்டும். புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஒப்பந்தப்படி பாசன நீர் வழங்க வேண்டும்.

சர்க்கார்பதி முதல் நல்லாறு வரை மலையிலிருந்து இயற்கையாக வரும் நீரோடைகளை திசை திருப்பப்பட்டு, காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணியின்போது காண்டூர் கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. இயற்கையாக உள்ள நீரோடைகளை முன்பு இருந்ததைப் போலவே அதன் போக்கிலேயே மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X