பொது செய்தி

இந்தியா

கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது; ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதும், தெலுங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. அவர்களுக்கான விருதினை உறவினர்களிடம் ஜனாதிபதி வழங்கினார்.லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி இந்திய - சீன
Col Santosh Babu, Mahavir Chakra, Havildar K Palani, Vir Chakra, President, சந்தோஷ் பாபு, மகா வீர் சக்ரா, ஹவில்தார் பழனி, வீர் சக்ரா

புதுடில்லி: கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதும், தெலுங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. அவர்களுக்கான விருதினை உறவினர்களிடம் ஜனாதிபதி வழங்கினார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி, தெலுங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில், கர்னல் சந்தோஷ் பாபுதான் இந்திய வீரர்களுக்கு தலைமை ஏற்று நடத்திய ராணுவ அதிகாரி. சீனா தரப்பிலும் 35 பேர் பலியாகி இருப்பதாக கூறப்பட்டது. வீரமரணமடைந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை அறிவித்தன. மேலும், கர்னல் சந்தோஷ் பாபு, ஹவில்தார் பழனி உள்ளிட்டோருக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்தன.


ஜனாதிபதி வழங்கினார்

latest tamil newsஇதற்கான விருது வழங்கும் விழா டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (நவ.,23) நடைபெற்றது. இதில், கர்னல் சந்தோஷ் பாபுவுக்கான மகா வீர் சக்ரா விருதினை அவரது தாய் மற்றும் மனைவியிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அதேபோல், தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கான வீர் சக்ரா விருதினை அவரது மனைவியிடம் வழங்கினார். தொடர்ந்து மற்ற வீரர்களின் உறவினர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
23-நவ-202117:08:13 IST Report Abuse
Samathuvan We people recomm that Government should give these awards to people whoever involved in the surgical strike at Pulvama that we had destroyed the terrorists camp.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
23-நவ-202117:01:09 IST Report Abuse
S. Bharani சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
23-நவ-202116:06:47 IST Report Abuse
Samathuvan We need awards for the people who destroyed the camp of Pakistan terrorists by surgical strike in pullwama also??????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X