பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். தி.மு.க ஆட்சிக்கு
கோவை, தொழில்துறை, முதலீட்டாளர்கள், மாநாடு, ஒப்பந்தங்கள், கையெழுத்து,

கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. முதலில் கொரோனா; அதில் முழுமையாக வெளிவரவில்லை என்றாலும், ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். அதைதொடர்ந்து மழை, வெள்ளம்; பாதிப்பு பகுதிகளில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டோம். இப்படி சோதனையான காலங்களில் கூட ஏராளமான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது.


latest tamil news


கடந்த 5 மாதங்களில் இது 3வது முதலீட்டாளர்கள் மாநாடு. இரு மாதங்களுக்கு ஒரு மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழில் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளதற்கு நன்றி. இன்று மட்டும் ரூ.35,208 கோடி அளவில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 76,795 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். 5 ஆண்டுகளில் சாதிக்க வேண்டியவற்றை 5 மாதங்களில் சாதித்ததாக சிலர் பேசினார்கள். இப்படியே சென்றால் தமிழகம் விரைவில் முதலிடத்தை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பர் ஒன் முதல்வர் என்பதை விட நம்பர் ஒன் தமிழகம் என்ற நிலையை உருவாக்குவதுதான் எனது லட்சியம்.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை எட்டுவோம்; அந்த இலக்கையும் தூரம் வெகுதொலைவில் இல்லை. தமிழகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் டைடல் பார்க் அமைக்கப்படும். மாநில தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது கோவை மாவட்டம். வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும். கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும். மின்னணுவியல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவை என்றாலே மக்களின் விருந்தோம்பலும், புதிய கண்டுபிடிப்புகளும் தான் நினைவுக்கு வருகிறது. கோவை மாவட்டத்தில் உருவாக்கப்படும் பொருள்களை கண்டு உலகமே வியந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.latest tamil newsமுன்னதாக கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறை முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார். மாநாட்டில் கலந்துகொள்ள வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா, பீளமேடு, ஹோப்ஸ் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74 ஆயிரத்து, 835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வான்வெளி, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.


latest tamil newsதொடர்ந்து, ரூ.13,413 கோடி முதலீட்டில் 13 புதிய திட்டங்களுக்கும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news
இந்த மாநாட்டில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி, எம்.பி.,க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சண்முக சுந்தரம், அதிகாரிகள் , டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன் , பன்னாரி அம்மன் சுகர்ஸ் நிறுவன தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-நவ-202104:37:55 IST Report Abuse
J.V. Iyer இப்படீல்லாம் எடுத்து விடாதீங்க சிங்கம் அண்ணாமலை சீறி எழுவார் பின்னே
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
24-நவ-202103:01:58 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் ஒன்றை தெளிவாக கூறிவிடுதல் நல்லது -இந்த டைடல் பார்க் என்பது ஏற்கனவே கூறப்பட்டிருந்த பார்க்குகள் அல்ல , மென்பொருள் சம்பந்தப்பட்டது என்று -இல்லை என்றால் அவரது கட்சிக்காரர்களும் அவர்களின் கான்ட்ராக்டர்களும் இதுவும் அதேபோல என்று கட்டிவிட்டிருவாங்க
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-நவ-202100:21:21 IST Report Abuse
Vijay D Ratnam இது ஒரு வயிற்றெரிச்சல் பதிவு. எங்களையும் கொஞ்சம் பாருங்க ஆட்சியாளர்களே. சென்னை, கோவை நல்ல வளர்ச்சி அடைத்து விட்டது. ஸ்டாலின் அவர்களே நீங்கள் சென்னை கோவைக்கு இணையாக ஒரு ஊரை உருவாக்கலாமே. தன் செய் ஊர் அதாவது குளிர்ச்சி பொருந்திய வயல்களால் சூழப்பட்ட ஊர் அதாங்க தஞ்சாவூர். தமிழகத்தின் மைய பகுதியில் இருக்கும் ஒரு பூங்கா. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல திருச்சி தஞ்சாவூருக்கு ஜஸ்ட் 48 கிமீ தூரம்தான். அரை மணி நேர பயணம். நம்ம பசங்க பைக் ஆக்சிலேட்டரை ஒரு தடவை முறுக்கினால் திருச்சி. இன்னமும் சுற்றுச்சூழல் மாசு படாத ஊர். பெரிதாக தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத ஊர். அணைத்து விதமான வசதிகளையும் வைத்துக் கொண்டு பெரிதாக வளர்ச்சியை காணாத அழகு நகரம் எங்க தஞ்சாவூர். மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரயில் பாதையில் 24 மணிநேரமும் ரயில் போக்குவரத்து வசதி கொண்ட ஊர். தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களுக்கும் மூலை முடுக்குகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் நேரடி பஸ் வசதி கொண்ட 24 மணிநேரமும் பஸ் வசதி கொண்ட அருமையான சாலை வசதி கொண்ட ஊர். அருகிலேயே ஜஸ்ட் 20 நிமிட பயண தூரத்தில் திருச்சி விமான நிலையம், ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் காரைக்கால் துறைமுகம், தஞ்சாவூர் மாவட்ட தலைநகரம். மருத்துவம், பொறியியல் என்று எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதி தஞ்சை. சுத்தமான தமிழை பேசும் மரியாதையான மக்கள். அருகில் கோவில்கள் நிறைந்த கும்பகோணம். இதுக்கு மேல என்ன வேண்டும். நாங்களும் எங்ககிட்ட இருக்குற பெரிய கோவிலை பார்த்தே பெருமைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டியதுதானா. அரிசி, காய்கறி, பழங்கள், தானியங்கள், கரும்பு என்று தென்னிந்தியாவுக்கே நூற்றாண்டு நூற்றாண்டு காலமாக சோறு போட்டுகொண்டு இருக்கும் நாங்களும் டெவலப் ஆகவேண்டாமா. எங்க புள்ளைங்களும் டெவலப் ஆக வேண்டாமா. எங்கள் தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும்னு எதிர்பார்த்தோம். அதுவும் மதுரைக்கு போய்விட்டது. இந்த டைடல் பார்க்கையாவது கொண்டு வாருங்கள். நொடிச்சி போன பழைய ஜமீன் மாதிரி இருக்கோம்.
Rate this:
raja - Cotonou,பெனின்
24-நவ-202111:13:42 IST Report Abuse
rajaஇதை நான் வழிமொழிகிறேன்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X