பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:தெற்கு வங்கக் கடற்பகுதியல் (5.8 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு
TN,Tamilnadu,Rain, 7 District, Heavyrain, தமிழகம், 7 மாவட்டம், கனமழை, வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:



தெற்கு வங்கக் கடற்பகுதியல் (5.8 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும்.


latest tamil news


Advertisement

இன்று (நவ.,23ம் தேதி): மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news



நாளை 24ம் தேதி: திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ., 26 மற்றும் 27ம் தேதி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை



அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 28 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:



ரெட் ஹில்ஸ், சோழவரம் (திருவள்ளூர்), பந்தலுார் (நீலகிரி) தலா 7 செ.மீ., காமாட்சிபுரம் (திண்டுக்கல்), தேவாலா (நீலகிரி), மினகிரி (தென்காசி), உடுமலைபேட்டை (திருப்பூர்) தலா 5 செ.மீ., டி.ஜி.பி., அலுவலகம், எழிலகம் (சென்னை), கூடலுார் பஜார், பிரையர் எஸ்டேட், மேல் கூடலுார் (நீலகிரி), அவினாசி (திருப்பூர்) தலா 4 செ.மீ., அயனாவரம், தண்டையார்பேட்டை (சென்னை), திருப்பத்துார் (சிவகங்கை), துவாக்குடி, தாத்தையங்கார்பேட்டை (திருச்சி), தண்டராம்பட்டு (திருவண்ணாமலை), பவானிசாகர், கோபி (ஈரோடு), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) தலா 3 செ.மீ.,


latest tamil news



மீனவர்களுக்கான எச்சரிக்கை:




வங்கக்கடல் பகுதிகள்



நவ., 26 மற்றும் 27ம் தேதி: குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள். தமிழக கடலோர பகுதிகள் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-202108:09:58 IST Report Abuse
Sathya Another chance for DMK to make money. Thanks to North East. Even the tomato price increase is also into the pockets of DMK. They control the traders.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X