உஜ்ஜைனி : மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புறப்பட்ட ராமாயண் விரைவு ரயிலில் உள்ள பணியாளர்களுக்கு காவி வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டது. அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பணியாளர்கள் காவி சீருடை அணிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஹிந்து மதத்தையும், சாதுக்களையும் இழிவுபடுத்தும் செயல் என ம.பி.,யில் உள்ள உஜ்ஜைனி அகடா பரிஷத்தின் முன்னாள் பொதுச் செயலர் அவதேஷ்புரி கூறியிருந்தார். மேலும், காவி சீருடையை மாற்றக்கோரி ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதிய அவர், டில்லியில் டிச.,12ல் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் கூறினார். இந்நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து, பணியாளர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE