சேலத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்: 5 பேர் பலி

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (3)
Advertisement
சேலம்: சேலத்தில் சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் உயிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதர் கோவில் தெருவில் இன்று (நவ.,23) காலை 6.30 மணிக்கு சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள்
SELAM, GAS BURST, 5 MEMBER DEATH, சேலம், காஸ் வெடிப்பு, வீடுகள் தரைமட்டம், 5 பேர் பலி

சேலம்: சேலத்தில் சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் உயிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news


சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம் பலி 5 ஆனது |Cylinder Explosion | 5 Death |salem

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதர் கோவில் தெருவில் இன்று (நவ.,23) காலை 6.30 மணிக்கு சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய 5 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 10 நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். காஸ் வெடித்து இடிந்த கட்டிடத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் குழந்தை பூஜாஸ்ரீயை மீட்டனர்.


latest tamil news


இந்த இடிபாடுகளில் வெங்கட்ராமன் (62), இந்திராணி (54), மோகன்ராஜ் (40), நாகசுதா (30), கோபால் (70), தனலட்சுமி (64), சுதர்சன் (6), கணேசன் (37), உஷாராணி (40), லோகேஷ் (18), முருகன் (46) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கோபி (52) இவர் 90 சதவீதம் தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளார். ராஜலட்சுமி மற்றும் தீயணைப்பு சிறப்பு அலுவலர், பத்மநாபன், அவரது மனைவி தேவி, வாலிபர் கார்த்திக் ராம், எல்லம்மாள் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


latest tamil news


மேலும் இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உயிரிழந்தார்களா? என்று தெரியவில்லை. தீயணைப்புத்துறையினரும், பேரிடர் மீட்புத் துறையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
23-நவ-202118:15:42 IST Report Abuse
W W ஒவ்வொரு கேஸ் ஸிலிண்டர்களும் ஒரு பெரிய பாம்முக்கு சமம் இதனை சில பேர் மறந்து தெரியமல் ஹாண்டில் செய்வதால் கூட இது மதிறி விபத்துக்கள் நடக்க வாப்புள்ளது.இதற்க்கு ஒருநமுறை 30 வருடம் முன்பு நான் ஷர்ஜாவில் ஒரு ப்ளட்டில் பார்த்த நியபகம்.கேஸ் ஸிலிண்டர்கள் எல்லாம் க்ரவுன்ட் ப்ளோரில் ஒரு இடத்தில் ஒவ்வொண்ரும் ஒரு கேஜ்ஜில் நொம்பர் போட்டு லாக் செய்து வைக்கப்பட்டிருநது கேஸ் லாயின் மட்டும் பயிப்ப் முலம் ஒவ்வொரு வீட்டிற்க்கும் கனெக்சன் கொடுக்கபட்டிருந்தது.இப்போது நம் இடத்திலும் இருக்கிறது. அப்படி இருப்பின் இது மதிறி சில விபத்துக்களை களைய்து விடலாம்.(இதனை ஒரு சிலர் சிலவு அதிகம் என்று செய்யமல் விட்டு விடுகின்றனர்) இதனை அரசு இனி வரும் வீடுகளில் அமைக்க வற்புத்தாலாம்.அல்லது பயிப்ப் முலம் கேஸ்ஸை சப்ளை செய்யலாம் என்பது என் எளிய கருத்து.
Rate this:
Cancel
23-நவ-202115:38:18 IST Report Abuse
ஆரூர் ரங் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வாயு இணைப்பு பன்மடங்கு பாதுகாப்பான ஒன்று. வேற்று மாநில மாநகரங்களில் பல்லாண்டுகளாக 👍வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சராசரி செலவு மாதத்திற்கு 400 ரூபாய் மட்டுமே. ஆனால் ரொம்ப நாட்களாக காஸ் ஏஜென்சி மாஃபியா காங் தீய முக😡 தமிழகத்தில் அமலாகாமல் தடுத்துக் கொண்டிருகிறது. இப்போது மத்திய அரசின் அழுத்ததால் ஓரளவு வேகம் பிடிக்கிறது .அது வரும்வரை இதுபோன்ற துயர நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
23-நவ-202115:17:20 IST Report Abuse
 N.Purushothaman சம்மந்தபட்ட எரிவாயு நிறுவனம் அவர்கள் தரப்பில் இருந்து வல்லுநர்களை கொண்ட விசாரணை குழு அமைத்து எரிவாயு உருளை வெடித்ததன் பின்னணி ,உருளையின் உலோக பயன்பாடு என அனைத்தயும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் ....கோர விபத்தில் மரணித்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X