வார்த்தைகளை விட அதிரடி நடவடிக்கைகளே தேவை; ஐ.மு., அரசு பற்றி மணிஷ் திவாரி விமர்சனம்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: கடந்த 2008 ம் ஆண்டு நவ.,26 ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.,)ஆட்சியின் போது, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர், அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, வெறும் வார்த்தைகளை விட அதிரடி நடவடிக்கைகளே தேவை என தெரிவிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்த காலகட்டத்தில், 2008
UPA,  MUMBAI ATTACK, TERROR, TERRORIST, CONGRESS, MANISH TEWARI

மும்பை: கடந்த 2008 ம் ஆண்டு நவ.,26 ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.,)ஆட்சியின் போது, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர், அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, வெறும் வார்த்தைகளை விட அதிரடி நடவடிக்கைகளே தேவை என தெரிவிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்த காலகட்டத்தில், 2008 ம் ஆண்டு நவ., 26 ல் பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பை வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 10 பேர், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, நாரிமன் பகுதி, லியோபோல்ட் கபே, தாஜ் ஓட்டல் மற்றும் ஓப்ராய் - டிரிடென்ட் ஓட்டல் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வைத்தும் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, '' Flash Points;20 Years- National Security Situations that impacted India'' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய பகுதிகள் சிலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.


latest tamil news


அதில் கூறப்பட்டுள்ளதாவது: ''நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிப்பதில் எந்த கருணையும் காட்டாத நாட்டிடம், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது பலத்தின் அடையாளம் அல்ல. அது பலவீனத்தின் அடையாளமாகவே கருதப்படும். வார்த்தைகளை விட அதிரடி நடவடிக்கைக்கு என்று ஒரு நேரம் வரும். மும்பை தாக்குதல் நடந்த நவம்பர் 26ம் தேதிக்கு பிறகு, அதுபோன்று செய்திருக்க வேண்டும். எனவே, இந்த தாக்குதலுக்கு பின்னர் உடனடியாக பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து''. இவ்வாறு மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் தொடர்பாக பா.ஜ., தேசிய பொது செயலர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., அரசு பயனில்லாத அரசாக இருந்தது. நாட்டின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டது கிடையாது. இந்த விவகாரத்தில், சோனியாவும், ராகுலும் தங்களது மவுனத்தை கலைப்பார்களா? அந்த நேரத்தில் இந்திய ராணுவத்திற்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என சோனியா பதில் அளிப்பாரா? பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிப்போம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நமது தைரியமிக்க ராணுவ வீரர்கள் அனுமதி கேட்டனர். ஆனால், அனுமதி தரப்படாதது ஏன்? இந்த தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்களையும் அவமதித்துள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-202100:28:54 IST Report Abuse
Krishna ARUVARUPPIN UCHAM INDHA JENMANGAL
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-202100:28:54 IST Report Abuse
Krishna IDHARKKU KAARANAM KEVALAMAANA VOTTU VANGI ARASIYAL.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
23-நவ-202120:04:20 IST Report Abuse
sankar ''நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிப்பதில் எந்த கருணையும் காட்டாத நாட்டிடம், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது பலத்தின் அடையாளம் அல்ல. அது பலவீனத்தின் அடையாளமாகவே கருதப்படும்"- எல்லாம் சிறுபான்மை ஓட்டுவங்கி கெடுத்த கெடுதல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X