வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றதற்கு பா.ஜ.,வினரே காரணம்: உமாபாரதி

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு பா.ஜ., தொண்டர்கள் ஏற்படுத்தாமல் இருந்ததால் தான் அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த
Agri Law, Withdraw, Umabharathi, வேளாண்சட்டம், வாபஸ், உமாபாரதி, விமர்சனம்,

புதுடில்லி: ‛‛புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு பா.ஜ., தொண்டர்கள் ஏற்படுத்தாமல் இருந்ததால் தான் அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.


latest tamil news


மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது. விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்தன. இனிப்பு வழங்கி கொண்டாடினர். இருப்பினும் பார்லிமென்டில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று வேளாண் சங்கங்கள் அறிவித்து போராடி வருகின்றனர்.

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியதாவது: என்னைப் போன்றவர்களுக்கு வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவதாக பிரதமரின் அறிவிப்பு வலியை ஏற்படுத்தியிருக்கிறது. வேளாண் சட்டங்கள் குறித்த முக்கியத்துவத்தை விவசாயிகளின் மத்தியில் ஏற்படுத்த முடியாததற்கு பா.ஜ., தொண்டர்களே காரணம். நம்மால் ஏன் வேளாண் சட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்ல முடியவில்லை?. இவ்வாறு உமாபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202107:13:14 IST Report Abuse
அப்புசாமி முதல்ல பா.ஜ ஆளுங்களுக்கு புரிஞ்சாத்தானே விவசாயிங்களுக்கு சொல்லி புரிய வெக்க முடியும்?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-நவ-202119:59:19 IST Report Abuse
sankaseshan உமா சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கு முழுவதும் அல்ல பாமரா பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போவுமே தயார் போலி கமிசன் மண்டி ப்ரோக்கர்கள் ஒத்துழைப்பார்களா
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-202119:56:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதை இந்த அம்மிணி எந்த அளவுக்கு பண்ணிச்சீ ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X