முடிவுகள் எதுவும் தெரியாமல் எதற்கு ஆணையங்களை அமைக்கிறீர்கள்?: உச்சநீதிமன்றம் கேள்வி

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கில், பெரும்பாலான ஆணையங்களின் முடிவுகள் எதுவுமே தெரியாமல் இருந்துள்ளதாகவும், பிறகு எதற்கு இத்தகைய ஆணையங்களை அமைக்கிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கிலிருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்
Supreme Court, Arumugasamy Commission, TNGovt, SC, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம், தமிழக அரசு

புதுடில்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கில், பெரும்பாலான ஆணையங்களின் முடிவுகள் எதுவுமே தெரியாமல் இருந்துள்ளதாகவும், பிறகு எதற்கு இத்தகைய ஆணையங்களை அமைக்கிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கிலிருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் இன்று (நவ.,23) நடைபெற்றது. அப்போது, ஒரு தலைபட்சம், தகுதியின்மை போன்ற காரணங்களுக்காக ஆறுமுகசாமி ஆணையத்தை எதிர்ப்பதாகவும், மருத்துவர்களை விசாரிக்கும் ஆணையத்தில் ஒரு மருத்துவ நிபுணர்கள் கூட இல்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்பல்லோ தரப்பில் முன்வைக்கப்பட்டது.


latest tamil news


தமிழக அரசு தரப்பிலான வாதுரை: ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம். மருத்துவமனை தரப்பில் என்ன மருந்துகள் ஜெயலலிதாவிற்கு கொடுத்தது, என்ன சிகிச்சையை வழங்கியது போன்ற விவரங்கள் எல்லாம் வெளிப்படையாக தெரியவேண்டும். அதை தான் ஆணையம் செய்து வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் ஓர் உண்மை கண்டறியும் ஆணையம். அதன் வேலை உண்மைத் தகவல்களை திரட்டி வழங்குவது மட்டும்தான். ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க எந்த மறுப்பும் இல்லை.


latest tamil news


உச்ச நீதிமன்றம் விரும்பினால் அதனை செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் இருந்து நாங்கள்தான் அந்த மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்போம். அதில் அப்போலோ தலையிடக் கூடாது. ஆணையத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய தயாராக இருக்கிறோம். ஆணையத்தை விரிவாக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னால் அதனை செய்வதற்கும் தயாராக உள்ளோம்.

ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்பதை ஏற்க முடியாது. மனு மீது மனுவை தாக்கல் செய்து ஆணையத்தின் செயல்பாட்டை தடுக்கவே அப்பல்லோ முயற்சிக்கிறது. ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அரசின் முடிவு. அதில் கூட ஆணையம் தலையிட முடியாது. இவ்வாறு தமிழக அரசு வாதிட்டது.


latest tamil news


இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், 'பெரும்பாலான ஆணையங்களின் முடிவுகள் எதுவுமே தெரியாமல்தான் இருந்துள்ளது. அதன் முடிவுகள் எதுவும் பொதுமக்கள் பார்வைக்கு கொடுக்கப்படவில்லை. பிறகு எதற்கு இத்தகைய ஆணையங்களை அமைக்கிறீர்கள்?,' எனக் கேள்வி எழுப்பியதுடன், ஆறுமுகசாமி ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளை கடைபிடிக்கிறது என்பது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
26-நவ-202107:07:21 IST Report Abuse
Swaminathan Chandramouli நல்லவேளை அம்மையார் திரு உடலை கல்லறையில் இருந்து எடுத்து ஆய்ய்வு செய்ய சொல்லவில்லை இதனால் யாருக்கு லாபம் அதிமுகவுக்கா அல்லது திமுகவுக்கா ? மக்கள் வரி பணம் அனாவசியமாக செலவாகிறது
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
24-நவ-202103:58:18 IST Report Abuse
Ram நிஜ ஆறுமுக சாமியே வந்தாலும்.....
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
24-நவ-202103:56:17 IST Report Abuse
Ram தீர்ப்பு வரும் ஆனா வராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X