சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் அடித்து வரப்பட்ட 36 மாடுகள் மீட்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, பாலாற்றில் அடித்து வரப்பட்ட 36 மாடுகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.கர்நாடக மாநிலம், பேத்தமங்கலம் அணை திறக்கப்பட்டதால், கடந்த 19ம் தேதி முதல் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக வங்கக் கடலில் வெள்ளநீர் கலந்து வருகிறது.அன்று மாலை வேலுார்
பாலாற்றில் அடித்து வரப்பட்ட 36 மாடுகள் மீட்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, பாலாற்றில் அடித்து வரப்பட்ட 36 மாடுகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கர்நாடக மாநிலம், பேத்தமங்கலம் அணை திறக்கப்பட்டதால், கடந்த 19ம் தேதி முதல் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக வங்கக் கடலில் வெள்ளநீர் கலந்து வருகிறது.

அன்று மாலை வேலுார் சேண்பாக்கம் பாலாற்றில் இருந்து 70 மாடுகள் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தீயணைப்புத் துறையினர் மாடுகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதி பாலாற்றில் மாடுகள் அடித்து வரப்பட்டதாக தகவல் வந்தது. சிப்காட், ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் பாலாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 36 மாடுகளை கடந்த இரண்டு நாட்களில் மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

பல மாடுகளை வெள்ளம் குறைவான பகுதிகளில் தண்ணீரில் ஓட்டி வந்தனர். சில மாடுகளை ரப்பர் படகுகளில் ஏற்றிக் கொண்டு கரை சேர்த்து உணவு அளித்து காப்பாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X