பொது செய்தி

தமிழ்நாடு

இனிமையான இஷா!

Added : நவ 23, 2021
Share
Advertisement
பார்த்த நொடியில் கண்களுக்குள் ஓவியமாகி விடுவாள் காத்திருக்கும் விழிகள் இவளுடன் காவியம் பாடும். அடைமழையில் தப்பித்தவர்கள் இவள் அனல் பார்வையில் சிக்கி கொள்வார்கள் என கவி பாடும் அளவிற்கு அழகுமிளிரும் இளம் நடிகை இஷா தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக உங்களை பற்றி சொந்த ஊர் ஈரோடு. வீட்டில் ஒரே பொண்ணு. பி.எஸ்.சி., பேஷன் டிசைனிங் முடித்துள்ளேன். கல்லுாரி
இனிமையான இஷா!


பார்த்த நொடியில் கண்களுக்குள் ஓவியமாகி விடுவாள் காத்திருக்கும் விழிகள் இவளுடன் காவியம் பாடும். அடைமழையில் தப்பித்தவர்கள் இவள் அனல் பார்வையில் சிக்கி கொள்வார்கள் என கவி பாடும் அளவிற்கு அழகுமிளிரும் இளம் நடிகை இஷா தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக


உங்களை பற்றி


சொந்த ஊர் ஈரோடு. வீட்டில் ஒரே பொண்ணு. பி.எஸ்.சி., பேஷன் டிசைனிங் முடித்துள்ளேன். கல்லுாரி காலங்களில் மாடலிங் செய்வேன். கிளாசிக்கல் டான்சில் கலக்குவேன். இதை பார்த்து நிறைய பேர் பாராட்டியதால் சினிமா ஆசை துளிர்ந்தது.


முதல் சினிமா


'அதோ அந்த பறவை போல்' பட ஹீரோயின் அமலாபாலுக்கு உதவியாளர் கேரக்டரில் நடித்தேன். முதல் பட நடிப்பை பார்த்த பலர் பாராட்டியது உற்சாகம் தந்தது.


அடுத்த படம்

ஆகாஷ் இயக்கிய 'நான் திருடன் இல்லை கொள்ளைக்காரன்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளேன். நல்ல கதைகளம். கொரோனாவால் ரீலீஸ் ஆகவில்லை. விரைவில் வெளியாகி எனது திறமையை பேசக்கூடிய படமாக இருக்கும். ஒரு ஆண்டுக்கு முன் ஈரோடு சவுந்தர் இயக்கத்தில் 'உள்ளேன் ஐயா உள்ளேன்' படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரின் மனைவியாக நடித்தது உற்சாகமாக இருந்தது. இது குட்டீஸ்களுக்காக எடுக்கப்பட்ட படம். வெளியாகும் நிலையில் இயக்குனர் காலமானதால் அவரது உறவினர்கள் படம் வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர்.


* கிளாமர் பற்றி

கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக நடிப்பேன். தேவையான அளவு கிளாமர் காட்டுவேன். வெப் சீரியல்கள் கிளாமருக்காகவே எடுப்பது போல் உள்ளதால் ஒதுக்கி விடுகிறேன்.


பொழுது போக்கு

நிறைய ஷாப்பிங் செய்வேன். எனக்கு உரிய டிரெஸ் நானே டிசைன் செய்து தையல் செய்து மாடலாக அணிவது பிடிக்கும். கொங்குமண்டலத்தில் இருந்து சென்ற நடிகர்கள் பலர் சாதித்துள்ளனர். அந்த வரிசையில் நானும் இடம் பெறுவேன் என்றார்.

இவரை பாராட்ட eshaasingh17@gmail.com.
-சிவரவி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X