நான் பாரதியின் காதலி நாகா...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான் பாரதியின் காதலி நாகா...

Added : நவ 23, 2021
Share
நந்தலாலா பாடும் கரியநிற விழிகளில் இமைகள் எனும் காக்கை சிறகுகள்... நீ பார்க்கும் இடங்களில் எல்லாம் தோன்றிடுமே மலர் கூட்டங்கள்... நீ பேசும் வார்த்தைகளுக்குள் இசைத்திடுமே இனிக்கும் கீதங்கள்... தீண்டும் தீயும் கூட உன் விரல் தொட்டால் தித்திப்பாய் மாறுமே, அழகான கவிதைகள் ஒவ்வொன்றும நீ பாரதியின் காதலி எனகூறுமே... என வர்ணிக்க துாண்டும் மதுரை மாடல், ஆர்.ஜெ., நாகா மனம் திறக்கிறார்...
நான்  பாரதியின் காதலி நாகா...

நந்தலாலா பாடும் கரியநிற விழிகளில் இமைகள் எனும் காக்கை சிறகுகள்... நீ பார்க்கும் இடங்களில் எல்லாம் தோன்றிடுமே மலர் கூட்டங்கள்... நீ பேசும் வார்த்தைகளுக்குள் இசைத்திடுமே இனிக்கும் கீதங்கள்... தீண்டும் தீயும் கூட உன் விரல் தொட்டால் தித்திப்பாய் மாறுமே, அழகான கவிதைகள் ஒவ்வொன்றும நீ பாரதியின் காதலி எனகூறுமே... என வர்ணிக்க துாண்டும் மதுரை மாடல், ஆர்.ஜெ., நாகா மனம் திறக்கிறார்...


சுய குறிப்புகள் என்னவோ

நான் தமிழ் பேசும் மதுரை பெண்... எம்.பி.ஏ., படிக்கும் போதே ரெயின்போ பண்பலையில் ஆர்.ஜெ.,வாக இருந்தேன். பிறகு கிடைத்த எச்.ஆர்., வேலை பிடிக்காமல் பாம்பன் மீனவர்களுக்கான பண்பலை சென்றேன். தற்போது மதுரையில் தனியார் பண்பலைஆர்.ஜெ.,வாக இருக்கிறேன்.


பண்பலையில் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை எப்படி

ஒரு முறை 2500 பேர் பங்கேற்ற ஆர்.ஜெ., தேர்வில் பங்கேற்றேன். அதில் தேர்வான 6 நபர்களின் நானும் ஒருத்தி. அப்போதே நம்மால் முடியும் என நம்பிக்கை வந்து விட்டது. பண்பாடு, பாரம்பரியம், தமிழ், எழுத்து ஆர்வம் தான் என்னை பயணிக்க செய்கிறது.


பேச்சு பணிகளுக்கு இடையில் எவ்விதமான எழுத்து பணி

சமீபத்தில் 'காத்தில் கதை இருக்கு' என்ற தலைப்பில புத்தகம் எழுதி அதை என் குரலில் பேசி ஒலி வடிவில் வெளியிட்டேன். இது ஒரு ஒலி புத்தகம். அந்த கதை பிரபலமானதால் அடுத்த பாகம் எழுதி, பேசுகிறேன்.


உங்களை 'பாரதியின் காதலி' என அழைப்பார்களாமே ஏன்

பாரதியின் கவிதைகள் எனக்கு பிடிக்கும். எப்போதும் அவரை பற்றி பேசுவதால் பாரதியின் காதலி என அழைக்கிறார்கள். பாரதி கவிதைகளை என் குரலில் ஒலி வடிவமாக வெளியிட உள்ளேன்.


அதென்ன ஒரு காலில் மட்டும் தண்டை அணிந்து உள்ளீர்களே

மதுரை என்றாலே கண்ணகியும் சிலம்பெனும் தண்டையும் ஞாபகம் வரும். 'காட்டு சிறுக்கி' பாடலில் வரும் 'தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு' வரிகள் பிடிக்கும். இரண்டின் அடையாளமாக தண்டை அணிந்துள்ளேன்.


இதுவரை நாகா திறமைக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள் என்ன

இரண்டு முறை தென் இந்திய பெண் சாதனையாளர் விருது பெற்றேன். முகநுாலில் என் பக்கத்தில் என்னை 2.2 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார்கள். பாரம்பரியம் பேசும் பெண் என பலர் பாராட்டு விருது வழங்குகிறார்கள்.


அடுத்ததாக ஏதை நோக்கி பறக்க போகிறது உங்கள் பயண சிறகு


சினிமாவில் நடிக்கும் திட்டம் உள்ளது... மாடலிங், போட்டோ ஷூட் செய்கிறேன். மதுரை சார்ந்த வரலாறுகளை வீடியோவாக பதிவிடுகிறேன். தனுஷ்கோடி குறித்த ஒரு நீண்ட ஆவணப்படம் எடுக்க தகவல்சேகரிக்கிறேன்... திரை பிரபலங்களுடன் நடிப்பு அனுபவம் குறித்து கலந்துரையாடுகிறேன்.
*ஸ்ரீனி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X