இஸ்ரேலில் குழந்தைகளைத் தாக்கும் கோவிட்: 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெருசலம்: இஸ்ரேலில் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகள் கோவிட் தாக்குதலுக்கு உள்ளாவதால் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (நவ.,23) தொடங்கப்பட்டுள்ளது.கோவிட்டுக்கு எதிராக இஸ்ரேல் மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியது. இதனால், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தது. ஆனால், இஸ்ரேலில் கடந்த கோடை காலத்தில் கோவிட் மூன்றாம் அலை வேகமெடுத்தது.
ISREL, COVID, CHILDREN, Attack, இஸ்ரேல், கோவிட், குழந்தைகள் பாதிப்பு, தடுப்பூசி,

ஜெருசலம்: இஸ்ரேலில் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகள் கோவிட் தாக்குதலுக்கு உள்ளாவதால் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (நவ.,23) தொடங்கப்பட்டுள்ளது.

கோவிட்டுக்கு எதிராக இஸ்ரேல் மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியது. இதனால், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தது. ஆனால், இஸ்ரேலில் கடந்த கோடை காலத்தில் கோவிட் மூன்றாம் அலை வேகமெடுத்தது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும் கோவிட் தாக்கியது.


latest tamil news


மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமோ, உயிரிழப்போ ஏற்படாவிட்டாலும், மூன்றாவது அலை பரவலின் வேகம் அந்நாட்டை கவலையடையச் செய்தது. இதனால், பூஸ்டர் தடுப்பூசி ஊக்குவிக்கப்பட்டது. முதற்கட்டமாக இணை நோய் கொண்டோர், 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் இது தகுதி வாய்ந்த அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் நஃப்டாலி பென்னெட் தெரிவித்ததாவது: கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இப்போது நாட்டில் அன்றாடம் பதிவாகும் தொற்றில் பாதி எண்ணிக்கை குழந்தைகள் வாயிலாகவே ஏற்படுகின்றது. குறிப்பாக 11 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் நாட்டில் ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகை 9 மில்லியன். அதில் 5.7 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-நவ-202119:57:40 IST Report Abuse
NicoleThomson அயோ இது என்ன புதுசா இவ்ளோ நாளா இருந்த இம்சை பத்தாதா?
Rate this:
Cancel
23-நவ-202119:40:22 IST Report Abuse
ஆரூர் ரங் ஐரோப்பாவில் நான்காம் அலை ஆட்டம் தாங்கவில்லை. இங்கு மூன்றாவது அலையே துவங்க😛 வில்லை. பிரச்னை அவர்கள் நம் தலையில் கட்ட முயன்ற PFIZER மாடர்ன தடுப்பூசி தரமா ? அல்லது அவர்களுக்காக( காசுக்கு ? ) குரல் கொடுத்த பப்பு ஸ்டா😎 கும்பலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X