பொது செய்தி

இந்தியா

நவ., 26 முதல் அலைபேசி கட்டணங்கள் 25% வரை உயர்கிறது!

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புது டில்லி: அலைபேசி சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. நவ., 26 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.50 கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும்.தற்போது 28 நாட்களுக்கு தினசரி ஒரு ஜி.பி., டேட்டா மற்றும் வரம்பின்றி அழைப்புகளை மேற்கொள்ள ரூ.219 வசூலிக்கப்படுகிறது. அதுவே தினசரி 1.5 ஜி.பி.,

புது டில்லி: அலைபேசி சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. நவ., 26 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.50 கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும்.latest tamil news
தற்போது 28 நாட்களுக்கு தினசரி ஒரு ஜி.பி., டேட்டா மற்றும் வரம்பின்றி அழைப்புகளை மேற்கொள்ள ரூ.219 வசூலிக்கப்படுகிறது. அதுவே தினசரி 1.5 ஜி.பி., என்றால் ரூ.249-ம், 2 ஜி.பி., என்றால் ரூ.298-ம் கட்டணமாக இருக்கின்றன.

இந்நிலையில் இக்கட்டணங்கள் அனைத்தும் நவ., 26 முதல் முறையே ரூ.265, ரூ.299 மற்றும் ரூ.359 ஆக உயர்த்தப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் கட்டண உயர்வை நேற்று (நவ., 22) அறிவித்த நிலையில், ரூ.7 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் வோடோபோனும் அதை அப்படியே பின்பற்றி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜியோவும் வரும் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கக் கூடும்.


latest tamil news
கட்டண உயர்வு தொடர்பாக நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: அலைபேசி சேவையை பொறுத்தவரை ஒரு பயனர் மூலமான சராசரி வருவாய் ரூ.300 ஆக இருக்க வேண்டும்.
அப்போது தான் நிதிநிலை ஆரோக்கியமானதாக இருக்கும். நெட்வொர்க்குகள் மற்றும் அலைக் கற்றைகளுக்கு தேவைப்படும் முதலீடுகளுக்கு இந்த அளவிலான வருவாய் தேவை. மேலும் இந்தியாவில் 5ஜி சேவையை கொண்டு வர இடமளிக்கும். எனவே தான் இக்கட்டண உயர்வு என கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
24-நவ-202114:53:24 IST Report Abuse
raja மாடு மேய்கிறவன் கூட மொபைல் வச்சிருக்கான் எங்க ஆட்சில் என்று பெருமை பட்டான் மாறன்...
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-202109:13:53 IST Report Abuse
 rajan Free data system ஒழிக்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு GB இரண்டு GB கொடுத்து மாணவர்களை கெடுத்து குட்டிச்சுவராக்கிய பெருமை ஜியோவை சேரும். மேலும், குடும்பப் பெண்கள் வீட்டை கவனிக்காம, SUNXT ல தவற விட்ட தொடர்களை பார்ப்பதும் சினிமா பார்ப்பதிலும் அடிக்ட் ஆகி விட்டனர். SUNXT ஒழிய வேண்டுமானால் FREE Data ஒழியனும். இரவு 12 மணி வரை மொபைல் பார்த்து தூக்கத்தை தொலைக்கிறார்கள். எல்லோரும் மாறன் குடும்பத்துக்கு வாரி வழங்குகின்றனர். வேண்டுமானால் கலாநிதி மாறன் Free ஆக data கொடுக்கட்டும். முன்பு இருந்தது போல் ஒரு GB க்கு 250 ருபாயும் ஒரு நிமிடம் பேச ஒரு ரூபாயும் போடுங்க. அப்பதான் மொபைல் தொல்லை ஒழியும். 2011 - 12 களில் நாங்கள் ஒரு GB 250 ருபாய் கொடுத்து மாதம் பூரா சிக்கனமாக உபயோகிப்போம். ஜியோ அம்பானி எல்லாரையும் கெடுத்தான். அவனால்தான் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்தன. பள்ளிக்கூட மாணவர்களை சீரழித்தது அம்பானி தான்.
Rate this:
raja - Cotonou,பெனின்
24-நவ-202114:47:18 IST Report Abuse
rajaஅதானிய உட்டுடீங்களே உடன்பிறப்பே...அப்புறம் கார்போரேட்டு வார்த்தையையும் சேர்த்து சொல்லுங்க எப்போதும்.......
Rate this:
Cancel
24-நவ-202107:10:31 IST Report Abuse
அப்புசாமி ஏத்துங்க... நல்லா ஏத்துங்க. மக்களிடம் நிறைய பணம் இருக்குந்னு நிர்மாஜீ அமெரிக்காவிலிருந்து பாத்து சொல்லிட்டாரு. மக்கள் ஒண்ணும் பண்ண முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X