'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமானம் எச்சரிக்கையுடன் புது மனு தள்ளுபடி

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :'சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் டில்லியில் அமைந்து வரும் புதிய பார்லிமென்ட் வளாகம் தொடர்பான புதிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.டில்லியில் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்குகளை உச்ச
 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமானம் எச்சரிக்கையுடன் புது மனு தள்ளுபடி

புதுடில்லி :'சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் டில்லியில் அமைந்து வரும் புதிய பார்லிமென்ட் வளாகம் தொடர்பான புதிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
டில்லியில் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.


latest tamil news



இந்நிலையில் புதிய வளாகத்தில், துணை ஜனாதிபதியின் இல்லம் அமைய உள்ள பகுதிக்கான நிலத்தின் வகையை மாற்றியமைத்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிக்குமார் அமர்வு கூறியுள்ளதாவது:பொழுதுபோக்கு இடத்துக்கான வகைப்பாட்டில் இருந்து குடியிருப்பு வகைப்பாட்டுக்கு இந்த நிலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.புதிய பார்லிமென்ட் வளாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நன்கு திட்டமிட்டு, அதன்படி தான் செயல்படுத்தி வருகிறது.

அனைத்து விஷயங்களையும் விமர்சிக்க முடியும். ஆனால், அது ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். இந்த நில வகைப்பாடு மாற்றியதால், பொது நலனுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று இனிமேல் எவரும் வழக்கு தொடரக் கூடாது. அதனால், இந்த மனு முழுமையாக நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
24-நவ-202107:37:15 IST Report Abuse
 N.Purushothaman அபராதம் விதித்தால் மட்டுமே இது போன்ற மொண்ணை வழக்குகளை தாக்கல் செய்ய சில கேடு கெட்ட மனிதர்கள் அல்லது அமைப்புக்கள் முன் வர தயங்கும் ....
Rate this:
Cancel
24-நவ-202107:06:40 IST Report Abuse
அப்புசாமி ஆயிரம் பேருக்கான பொழுது போக்கு இடத்தை ஒரு துணை ஜனாதிபதியின் வீட்டுக்கு மாத்தி அமைச்சது சூப்பர் தேஷ்பக்தி. பொறுப்பு எல்லாம். இனிமே கோர்ட், கேஸ்னு வந்தா பிச்சுப்புடுவாங்க பிச்சு. முடிஞ்சா நீயும் துணை ஜனாதிபதியா வா.. எஞ்சாய் பண்ணு.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-நவ-202120:59:13 IST Report Abuse
RajanRajan முன்பே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மறுபடியும் மனுதாக்கல் செய்த அந்த மகாத்மாவுக்கு நீதிமன்றம் ஏன் அபராதம் விதிக்கவில்லை. சட்டத்தில் ஓட்டை போட்டு வாதாட நுழையும் வக்கீல்களும் கண்டிக்கபட வேண்டியவர்கள் தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X