விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்து: நடிகை கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர்.| Dinamalar

விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்து: நடிகை கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர்.

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (15)
Share
மும்பை : சீக்கியரை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். இது
FIR against Kangana Ranaut for hurting religious sentiments of Sikh community

மும்பை : சீக்கியரை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.

விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா, போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது. இதற்கு, பல சீக்கிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.latest tamil news


.அகாலி தள மூத்த தலைவரான மஜிந்தர் சிங் சிர்சா தலைமையிலான குழுவினர் மும்பை போலீசில் அளித்துள்ள புகாரில் விவசாய போராட்டத்தை காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டு கங்கனா பேசியது, சீக்கியர்களை இழிவுபடுத்தும் செயல். இது, உலகெங்கும் வாழும் சீக்கிய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.

எதிர்காலத்தில் இதுபோல் எந்த ஒரு மதத்தினருக்கும் எதிராக கருத்து தெரிவிக்காத வகையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.இப்புகாரயைடுத்து நடிகை கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X