சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அவரா இப்படி?

Added : நவ 23, 2021
Share
Advertisement
அவரா இப்படி?'இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்; அரசியலில் இது சகஜம் தானே...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானைப் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள சக அரசியல்வாதிகள்.தொடர்ந்து மூன்று முறை ம.பி., முதல்வராகி, 'ஹாட்ரிக்' சாதனை படைத்தவர் சிவ்ராஜ் சிங் சவுகான். நான்காவது முறையாகவும்

அக்கம் பக்கம்


அவரா இப்படி?



'இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்; அரசியலில் இது சகஜம் தானே...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானைப் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள சக அரசியல்வாதிகள்.தொடர்ந்து மூன்று முறை ம.பி., முதல்வராகி, 'ஹாட்ரிக்' சாதனை படைத்தவர் சிவ்ராஜ் சிங் சவுகான். நான்காவது முறையாகவும் முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என, கடந்த சட்டசபை தேர்தலில் முட்டி மோதினார். ஆனால், பா.ஜ., வை விட சற்று அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று காங்., ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வரானார். சாதனை பறிபோன விரக்தியில் இருந்த சவுகான், ஜோதிராதித்யா சிந்தியாவை தன் பக்கம் இழுத்து, கமல்நாத் ஆட்சியை கவிழ்த்தார். இப்போது மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் சவுகானுக்கு முன்பு இருந்தது போல செல்வாக்கு இல்லை.
இதனால் மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, தன் மனைவியுடன் சென்றார் சவுகான்.இருவரும் பழங்குடியினரைப் போலவே உடையணிந்து, அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டனர். உற்சாக மிகுதியால் சவுகான், பழங்குடியினருடன் இணைந்து பாரம்பரிய நடனமும் ஆடி கலக்கினார். இதைப் பார்த்த சவுகானுக்கு நெருக்கமான நண்பர்கள், 'இவர் ரொம்பவும் அமைதியான ஆளாச்சே; அவரா இப்படி அதிரடி அரசியலுக்கு மாறி விட்டார்...' என, ஆச்சரியப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X