டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 23, 2021 | கருத்துகள் (1)
Share
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: 1971ல் வங்கதேசம் விடுதலை பெற காரணமாக இருந்தவர் இந்திரா. உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, வங்கதேச விடுதலைக்கு ஆதரவு திரட்டினார் இந்திரா. இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்களுக்கு ஆதரவு அளித்தார். இந்திராவின் தொலை நோக்குப் பார்வையும், இந்திய ராணுவத்தின் அணுகுமுறையும் வங்கதேசம் விடுதலை பெற

'டவுட்' தனபாலு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: 1971ல் வங்கதேசம் விடுதலை பெற காரணமாக இருந்தவர் இந்திரா. உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, வங்கதேச விடுதலைக்கு ஆதரவு திரட்டினார் இந்திரா. இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்களுக்கு ஆதரவு அளித்தார். இந்திராவின் தொலை நோக்குப் பார்வையும், இந்திய ராணுவத்தின் அணுகுமுறையும் வங்கதேசம் விடுதலை பெற உதவின.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நம் ராணுவத்தினர் துப்பாக்கியை துாக்கி சண்டையிடாமல், அந்நாட்டு மக்கள் நம் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், இந்திரா மேற்கொண்ட முயற்சிகளால் மட்டுமே வெற்றி கிடைத்ததோ என்ற, 'டவுட்'டை படிப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இந்திரா எந்த எண்ணத்தில் அந்த நடவடிக்கையை மேற்கொண்டாரோ, பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்த பிறகு, பாக்.,குக்கு நம் மீதான, 'காண்டு' அதிகரித்து விட்டதே!


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
: மத்திய அரசு, பெட்ரோல் மீதான வரியை, லிட்டருக்கு ௫ ரூபாய், டீசல் மீதான வரியை லிட்டருக்கு, 10 ரூபாய் குறைந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும் போது, தமிழக அரசு மட்டும் இயலாது எனக் கூறுவது நியாயமற்றது. இது, மக்களை ஏமாற்றும் செயல்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது நியாயம் தான். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து, விலைவாசியை கட்டுக்குள் வைப்போம்' என அறிவித்த, தி.மு.க., அதை செய்யத் தானே வேண்டும்... ஆட்சிக்கு வந்தால் பல, 'டெக்னிக்கல்' பிரச்னை இருக்கும் என்பதை அப்போது யோசிக்க மறந்து விட்டதோ என்ற, 'டவுட்' வருகிறது!


முதல்வர் ஸ்டாலின்:
சட்டசபை தேர்தலில் மற்ற மாவட்டங்களில் பெருவாரியாக வெற்றி கிடைத்திருந்தாலும், கோவை மாவட்டத்தில் நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதை விரிவாக பேசி, அரசியலாக்க விரும்பவில்லை. இது, அரசு விழா. வேறுபாடு பார்க்காமல் தொடர்ந்து பணிபுரிவோம். ஆட்சி இருக்கும் வரை கடைப்பிடிப்போம்.

'டவுட்' தனபாலு: அ.தி.மு.க.,வினருக்கு பெருவாரியான வெற்றியை கொடுத்த கோவை மீது, தி.மு.க.,வுக்கும், முதல்வருக்கும் கோபம் உள்ளது என்று அரசல், புரசலாக பேசப்பட்டு வந்தது. அதை உண்மை என நிரூபிக்கும் வகையில், முதல்வரின் பேச்சு உள்ளது. அப்படியானால், தி.மு.க., வெற்றி பெறாத, 80க்கும் மேற்பட்ட தொகுதிகளின் நிலை அதோ கதி தானோ என்ற, 'டவுட்' அந்த தொகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X