பொது செய்தி

இந்தியா

கல்வான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மஹாவீர் மற்றும் வீர் சக்ரா விருதுகள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுடில்லி:கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினருடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் உயிரிழந்த கர்னல் பிக்குமால் சந்தோஷ் பாபுவுக்கு மஹாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லையில் சீன படையினர் கடந்த ஆண்டு அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து எல்லையில் நம் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.துணிச்சல்கடந்த
 கல்வான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மஹாவீர் மற்றும் வீர் சக்ரா விருதுகள்

புதுடில்லி:கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினருடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் உயிரிழந்த கர்னல் பிக்குமால் சந்தோஷ் பாபுவுக்கு மஹாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லையில் சீன படையினர் கடந்த ஆண்டு அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து எல்லையில் நம் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.


துணிச்சல்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படையினருக்கும் நம் வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் கைகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலில் நம் படையினரை வழி நடத்திய கர்னல் பிக்குமால் சந்தோஷ் பாபு உட்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
நம் வீரர்களை துணிச்சலுடன் வழிநடத்தி தன் உயிரை தியாகம் செய்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு நாட்டின் உயரிய விருதான மஹாவீர் சக்ரா விருது நேற்று வழங்கப்பட்டது.கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷி மற்றும் தாய் மஞ்சுளா ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களான நாயப் சுபேதார் நுதுராம் சோரன், ஹவில்தார் கே.பழனி, நாயக் தீபக் சிங் மற்றும் சிப்பாய் குர்தேஜ் சிங் ஆகியோருக்கு வீர் சக்ரா விருது வழங்க பட்டது.மேலும் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த ஹவில்தார் தேஜிந்தர் சிங்குக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைசேர்ந்த ஹவில்தார் பழனியின் மனைவி வானதிதேவி விருதை பெற்று கொண்டார்.


நேருக்கு நேர்

இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கர்னல் சந்தோஷ் பாபு முன் மாதிரியான தலைமைத்துவம், துணிச்சலான செயலை காட்டியதோடு எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து, தன் துணிச்சலை வெளிப்படுத்தி நம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்து உள்ளார்.படுகாயம் அடைந்தபோதும், முன்னணியில் நின்று நம் படையினரை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி உள்ளார்.
கடைசி மூச்சு உள்ள வரை எதிரிகளை எதிர்த்து போராடி உள்ளார். இந்த உறுதியே எதிரி களை விரட்டி அடிக்க நம் படையினருக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X