சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: ரூ.2.50 கோடி நகை, பணம் தப்பியது

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. கடந்த, 20ல் மாலை, 6:00 மணிக்கு வங்கி மூடப்பட்டது. வங்கி காவலாளி, நேற்று முன்தினம் இரவு, அருகிலிருந்த அறைக்கு தூங்க சென்று விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை மர்மகும்பல் வங்கி ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்தது. வங்கிக்குள் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் முகம் பதிவாகாமல் இருக்க,

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. கடந்த, 20ல் மாலை, 6:00 மணிக்கு வங்கி மூடப்பட்டது. வங்கி காவலாளி, நேற்று முன்தினம் இரவு, அருகிலிருந்த அறைக்கு தூங்க சென்று விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை மர்மகும்பல் வங்கி ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்தது. வங்கிக்குள் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் முகம் பதிவாகாமல் இருக்க, அவற்றை உடைத்த கும்பல், காஸ் வெல்டிங் மூலம், நகைகள் இருந்த லாக்கரை உடைக்க முயன்றது. ஆனால், சரியான நேரத்திற்கு அலாரம் ஒலித்ததால், முயற்சியை கைவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியது. இதனால் லாக்கரில் இருந்த, 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது. நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் அதை பார்த்து, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். கிருஷ்ணகிரி தடயவியல் நிபுணர்கள் குழுவினர், டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் சென்று, கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் பைரவி சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் முரளிகண்ணன் விசாரணை நடத்தினார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X