பொது செய்தி

இந்தியா

மூன்றாவது அலை சாத்தியமில்லை: நம்பிக்கையூட்டும் நிபுணர்கள்

Updated : நவ 25, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், மூன்றாவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது' என, நிபுணர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.எச்சரிக்கைதுர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக, இந்தாண்டு, அக்டோபர், நவம்பர்
 மூன்றாவது அலை, சாத்தியமில்லை, நம்பிக்கை, நிபுணர்கள்

புதுடில்லி: 'கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், மூன்றாவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது' என, நிபுணர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.


எச்சரிக்கை

துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக, இந்தாண்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.ஆனால், தீபாவளி முடிந்து மூன்று வாரங்களாகும் நிலையில், நாட்டில் வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு ஏற்படும் பாதிப்பு, 8,000க்கு கீழ் குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில், புதிதாக, 7,579 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இது, கடந்த 543 நாட்களில் மிகவும் குறைவாகும். இந்நிலையில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கூறிஉள்ளனர்.

இது குறித்து, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள அசோகோ பல்கலையின் இயற்பியல் மற்றும் உயிரியல் பிரிவு பேராசிரியர், கவுதம் மேனன் கூறியுள்ளதாவது: இரண்டாவது அலையின்போது பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவர்கள் குணம்அடைந்துள்ளனர். இதனால், இயற்கையாகவே, மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதைத் தவிர, தடுப்பூசி போடும் பணியும் வேகமெடுத்துள்ளது. அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
நம் நாட்டில் வைரசின் வீரியமும் குறைந்துள்ளது. அதனால், மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இல்லை. வைரசின் போக்கை எப்போதும் முழுமையாக கணிக்க முடியாது. புதிய உருமாறிய வைரஸ் ஏற்பட்டால், வரும், டிசம்பர் முதல் 2022 பிப்ரவரிக்குள் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படலாம்.


பாதுகாப்பு நடவடிக்கை

ஆனாலும், அது இரண்டாவது அலையைப் போல மோசமானதாக இருக்காது. சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும்.இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன், தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போடுவதால், வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவை மிக முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
24-நவ-202110:30:14 IST Report Abuse
R. Vidya Sagar இதற்கு முன்னால் பீதி கிளப்பி விட்டவர்கள், அவர்களுக்கு முட்டு கொடுத்த அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகள் மேடைக்கு வரவும்.
Rate this:
Cancel
mahendran - trichy,இந்தியா
24-நவ-202109:50:26 IST Report Abuse
mahendran This is how they mislead last year.. Higher vaccinated countries are experiencing severe third wave . Pl. don't mislead
Rate this:
Cancel
24-நவ-202107:49:11 IST Report Abuse
அப்புசாமி இருக்கவே இருக்கு நம்ம டயலாக். வராது.... ஆனா வரும். வந்தாலும் வரலேன்னாலும் கரீட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X