பொது செய்தி

தமிழ்நாடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.,வில் விருப்ப மனு

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி மற்றும் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், தி.மு.க.,வினருக்கு, ஓசூரிலுள்ள, தி.மு.க., கட்சி அலுவலகத்தில், விருப்ப மனு வினியோகம் நேற்று துவங்கியது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., விருப்ப மனுக்களை வழங்கி துவங்கி வைத்தார். கட்சியினர் ஆர்வமுடன், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, விருப்ப மனுக்களை

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி மற்றும் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், தி.மு.க.,வினருக்கு, ஓசூரிலுள்ள, தி.மு.க., கட்சி அலுவலகத்தில், விருப்ப மனு வினியோகம் நேற்று துவங்கியது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., விருப்ப மனுக்களை வழங்கி துவங்கி வைத்தார். கட்சியினர் ஆர்வமுடன், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். மூன்று பேர் நேற்றே மனுக்களை பூர்த்தி செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தி வழங்கினர். வரும், 25 மாலை, 5:00 மணிக்குள், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ஓசூர் மாநகராட்சி வார்டுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சிக்கு, 2,500 ரூபாயும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் போட்டியிட, பாதி தொகையை செலுத்தினால் போதும் என மாவட்ட, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X