பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக சரிவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் நேற்று மாலை வினாடிக்கு, 32 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவுடன் உள்ளது. இதனால், அங்குள்ள அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி,

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் நேற்று மாலை வினாடிக்கு, 32 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவுடன் உள்ளது. இதனால், அங்குள்ள அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 32 ஆயிரம் கன அடியாக சரிந்தது. மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுவதால், நடைபாதை பூட்டப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X