பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகார் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம்: மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தால் ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'

Added : நவ 23, 2021
Share
Advertisement
பெருந்துறை: பெருந்துறை அருகே, பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மாணவ, மாணவியரை மிரட்டிய, பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, பெற்றோர்கள், மக்கள் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உயிரியல்

பெருந்துறை: பெருந்துறை அருகே, பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மாணவ, மாணவியரை மிரட்டிய, பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, பெற்றோர்கள், மக்கள் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உயிரியல் பாட ஆசிரியராக பணிபுரிந்தவர் திருமலை மூர்த்தி, 49; பள்ளி மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து கடந்த செப்., மாதமே மாணவியர் புகார் செய்தனர். ஆனால், தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சைல்டுலைன் அமைப்புக்கு, பள்ளி மாணவியர் மூவர், தொலைபேசியில் புகார் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஞானசேகரன் விசாரணை நடத்தி, போலீஸ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அறிக்கை அளித்தார். இதன் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் திருமலைமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் திருமலை மூர்த்தியின் பாலியல் சீண்டல் குறித்து, நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமையாசிரியர் கணேசன், பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்றும் மாணவியரை மிரட்டியுள்ளார். ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர், மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர், சீனாபுரத்தில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட கூடுதல் எஸ்.பி., கனகேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் கார்த்திகேயன், பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், 11:00 மணிக்கு சாலை மறியலை கைவிட்டனர். அதேசமயம் பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருடன், பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இதில் தலைமை ஆசிரியர் கணேசனை சஸ்பெண்ட் செய்வதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த மாணவ, மாணவியர், நிரந்தர பணிநீக்கம் செய்யக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிடவே, பதற்றம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தலைமை ஆசிரியர், மாணவியர் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும், சமாதானம் அடையாத மாணவியர், பெற்றோர், கணேசனை கைது செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். தொடர் பேச்சுவார்த்தையில், கணேசன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, 3:00 மணிக்கு மாணவ, மாணவியர், பெற்றோர், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X