பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் முதல் முறையாக 100 அடியை எட்டிய யார்கோள் அணை

Added : நவ 23, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கர்நாடகா அரசு கட்டிய யார்கோள் அணை நீர்மட்டம் முதல் முறையாக, 100 அடியை எட்டியுள்ளது.கர்நாடகா மாநிலம், நந்தி மலையில் உற்பத்தியாகும் பெண்ணையாறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கிறது. தமிழகத்தில், தென்பெண்ணையாறு என்று அழைக்கப்படும் இந்த ஆற்றால், 40 ஆயிரம்

கிருஷ்ணகிரி: கர்நாடகா அரசு கட்டிய யார்கோள் அணை நீர்மட்டம் முதல் முறையாக, 100 அடியை எட்டியுள்ளது.


கர்நாடகா மாநிலம், நந்தி மலையில் உற்பத்தியாகும் பெண்ணையாறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கிறது. தமிழகத்தில், தென்பெண்ணையாறு என்று அழைக்கப்படும் இந்த ஆற்றால், 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. கர்நாடகாவில், 112 கி.மீ., மட்டுமே ஓடும் இந்த ஆறு, தமிழகத்துக்குள், 320 கி.மீ., தூரம் பயணிக்கிறது. கர்நாடகா அரசு, காவிரி நீரை அபகரிப்பதை போல், தென்பெண்ணையாற்று நீரையும் கர்நாடக பகுதிகளுக்குள்ளேயே திருப்பி விட, தென்பெண்ணையாற்றின் துணை ஆறாக உள்ள மார்க்கண்டேய நதியின் குறுக்கில், யார்கோள் அணையை கட்டியுள்ளது. மார்க்கண்டேய நதியில் பாயும் நீரை மொத்தமாக சேமிக்க, யார்கோள் பகுதியிலுள்ள பள்ளமுகட்டில் புதிய பாதை அமைத்து, 430 மீ., நீளமும், 162 அடி உயரத்திலும் மதகுகளின்றி நீர்தேக்கும் வகையில் யார்கோள் அணை உள்ளது. இதில், அரை (0.5) டி.எம்.சி., நீரை தேக்கலாம் என, கர்நாடகா அரசு கூறினாலும், 2 டி.எம்.சி., வரை நீரை தேக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகா மாநிலத்திலுள்ள கோலார் மாவட்டம், பூதிகோட்டை மற்றும் காமசமுத்திரத்திலுள்ள அணைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் அணைகளிலிருந்து திறந்து விடப்படும் நீர் தற்போது மார்க்கண்டேய நதிக்கு வருகிறது. அந்த நீரால் யார்கோள் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், 162 அடி உயரம் கொண்ட யார்கோள் அணையில் தற்போது, 100 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால், இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கண்டேய நதியின் கிளை நதிகளான குப்தா ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது யார்கோள் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. இதை காண கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக எல்லையிலுள்ள கிராம மக்கள் அணைக்கு வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலாத்தலமாகவும் யார்கோள் அணை மாறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X