பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவர்களை விவசாயிகள் முற்றுகை

Added : நவ 23, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க வந்த மருத்துவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பெரியகுளம் பஞ்.,சக்திநகரில், 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்க்கின்றனர். கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக கோமாரி நோய் தாக்கி, 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கால்நடை

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க வந்த மருத்துவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.


நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பெரியகுளம் பஞ்.,சக்திநகரில், 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்க்கின்றனர். கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக கோமாரி நோய் தாக்கி, 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கால்நடை மருத்துவர்களுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அவர்கள் வரவில்லை என, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் சென்னை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று, உதவி இயக்குனர் மருதுபாண்டி மற்றும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு குழு மருத்துவர்கள் சக்திநகர் வந்தனர். அவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய ஆவணம், கறவை மாடுகளுக்கு தேவையான தாது உப்பு கலவை வழங்கினர். மருந்துகள் போதிய அளவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உதவி இயக்குனர் மருதுபாண்டி கூறினார்.

இதுகுறித்து, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேலிடம் கேட்டபோது, ''யாரோ சிலர் புரளியை கிளப்பி உள்ளனர். 10 நாட்களில், 60 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும், 10 மாடுகளுக்கு மட்டுமே கோமாரி நோய் இருக்கும். 10 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. 6,000 தடுப்பூசிகள் நாமகிரிபேட்டை, 2,000 தடுப்பூசிகள் திருச்செங்கோடு, 2,000 தடுப்பூசிகள் குமாரபாளையம் பகுதியிலும் செலுத்தப்பட்டுள்ளன. 20 ஆயிரம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளன. வந்தவுடன் சேந்தமங்கலம் பகுதிக்கு முக்கியத்துவம் வழங்கி தடுப்பூசி செலுத்தப்படும். மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களில் தடுப்பூசி வர வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X