பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு கோவிட் சோதனை : தமிழக அரசு

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: லண்டன், தென்னாப்பிரிக்கா, சீனா, வங்கதேசம் நாடுகளில் இருந்து வருவோர் கோவிட் சோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. நாடுமுழுவதும் கோவிட் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வாரத்திற்கு இருமுறை என வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே சீனா மற்றும் பிற வெளி

சென்னை: லண்டன், தென்னாப்பிரிக்கா, சீனா, வங்கதேசம் நாடுகளில் இருந்து வருவோர் கோவிட் சோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.



latest tamil news



நாடுமுழுவதும் கோவிட் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வாரத்திற்கு இருமுறை என வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே சீனா மற்றும் பிற வெளி நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.


latest tamil news



இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிங்கப்பூர், நியூசிலாந்து, லண்டன், தென் ஆப்ரிக்கா சீனா, வங்கததேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோர்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் ஒரு தடவை மட்டும் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் விமான நிலையத்தில் கட்டாயம் கோவிட் சோதனை செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் 2 தடவை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கோவிட் சோதனை தேவையில்லை என தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சுகாதாரதுறை , விமான நிலையங்களில் கோவிட் சோதனை குறித்து புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கோவிட் சோதனை கட்டாயம் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
24-நவ-202114:29:34 IST Report Abuse
raja கோவிட் டெஸ்ட் எடுக்கும் கான்டராக்ட்டு காவேரிக்கு மட்டும்தான்....
Rate this:
Cancel
Arul. K - Hougang,சிங்கப்பூர்
24-நவ-202105:48:49 IST Report Abuse
Arul. K இரண்டு தடுப்பூசி போட்டிருந்தாலும் கோவிட் சோதனை செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்குமே தவிர வராமல் இருக்காது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-நவ-202121:12:57 IST Report Abuse
Bhaskaran எப்படியாவது காசுபார்கனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X