பொது செய்தி

தமிழ்நாடு

ஆவினில் தேக்கம் அடைந்துள்ள 17,000 டன் பால் பவுடர்: பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Added : நவ 23, 2021
Share
Advertisement
சேலம்: 'அரசின் பொங்கல் தொகுப்பில் நெய் வழங்க உத்தரவிட்டு ஆவினின் நெய் தேக்கத்தை குறைத்தது போல், தற்போது தேங்கி உள்ள, 17 ஆயிரம் டன் பால் பவுடர் தேக்கத்தை குறைக்கும் வகையில், அங்கன்வாடி உட்பட பள்ளிக் குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு பால்

சேலம்: 'அரசின் பொங்கல் தொகுப்பில் நெய் வழங்க உத்தரவிட்டு ஆவினின் நெய் தேக்கத்தை குறைத்தது போல், தற்போது தேங்கி உள்ள, 17 ஆயிரம் டன் பால் பவுடர் தேக்கத்தை குறைக்கும் வகையில், அங்கன்வாடி உட்பட பள்ளிக் குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ரத்னகுமார், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு விபரம்: தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2 கோடியே, 15 லட்சத்து, 48 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள், 19 ஆயிரம் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருளுடன் ஆவின் நிறுவனத்தின் நெய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், ஆவினில் தேக்கம் அடைந்துள்ள, 5,000 டன் வெண்ணெயில், 2,500 டன் செலவாகி விடும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் சிரமங்களின்றி வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆவின் நிறுவனத்தில் தற்போதைய நிலையில், 17 ஆயிரம் டன் பால் பவுடர் தேக்கம் அடைந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால், பால் பவுடர் வழங்க வேண்டுமென்ற எங்களின் கோரிக்கையை, தற்போதைய தருணத்தில் பரிசீலனை செய்து, பொங்கல் முதல் இந்த திட்டத்தை அமல் படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், ஆவினில் பால் பவுடர் தேக்கம் குறையும். அத்துடன் பால் பவுடரை பாதுகாக்கும் பொருட்டு ஏற்படும் செலவினங்களை தவிர்க்க முடியும். மேலும், சங்கங்களிலிருந்து மாவட்ட ஒன்றியங்கள் பெற்ற பாலுக்கான பணத்தை நிலுவையில்லாமல் வழங்கவும், உற்பத்தியாளர்களுக்கு உரிய காலத்தில் பால் பணம் சென்றடையும். அங்கன்வாடி, சத்துணவு திட்டத்தில் பலன் பெறும் குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X