சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.18 லட்சம் சுருட்டிய ரியல் எஸ்டேட் பிரமுகர் கடத்தல்: சேலம் கும்பலை சுற்றிவளைத்த போலீசார்

Added : நவ 23, 2021
Share
Advertisement
சேலம்: அரசு வேலை வாங்கி தருவதாக, 18 லட்சம் ரூபாய் சுருட்டிய, மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நடத்தி வந்தவரை கடத்திய, சேலத்தை சேர்ந்த நான்கு பேரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.மதுரை, ஒத்தக்கடை, சர்வேயர் காலனியை சேர்ந்தவர் சண்முக ராஜேஸ்வரன், 43. இவர் கரூரில், 'சர்வே' துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். 2017ல், அங்குள்ள வெண்ணம்பாளையம் குளத்தின் நீர் பிடிப்பு

சேலம்: அரசு வேலை வாங்கி தருவதாக, 18 லட்சம் ரூபாய் சுருட்டிய, மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நடத்தி வந்தவரை கடத்திய, சேலத்தை சேர்ந்த நான்கு பேரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.


மதுரை, ஒத்தக்கடை, சர்வேயர் காலனியை சேர்ந்தவர் சண்முக ராஜேஸ்வரன், 43. இவர் கரூரில், 'சர்வே' துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். 2017ல், அங்குள்ள வெண்ணம்பாளையம் குளத்தின் நீர் பிடிப்பு பகுதியை, தனியார் கிரானைட்ஸ் நிறுவனத்துக்கு, 'பட்டா' வழங்கியதால் குற்ற வழக்கில் சிக்கி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதனால், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். இந்நிலையில், சேலத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக உள்ள, சீலநாயக்கன்பட்டி, வேல்நகர் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்த லட்சுமணன், 38, என்பவரிடம் தொடர்பு ஏற்பட்டது. அப்போது, ஹிந்து சமய அறநிலையத்துறையில் டிரைவர் பணியிடம் காலியாக உள்ளதால், அதற்கு தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாங்கி தரலாம்; அதற்கு கமிஷன் தருவதாக, சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதை நம்பி, சேலம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டையை சேர்ந்த மூன்று பேரிடம், தலா ஆறு லட்சம் ரூபாய் வீதம், 18 லட்சம் ரூபாயை வசூலித்த லட்சுமணன், சண்முகராஜேஸ்வரனிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், வேலை மட்டுமின்றி, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால், அவரை கடத்தி பணம் பெற லட்சுமணன் முடிவு செய்தார். அதற்காக, அவரது தம்பி ஆனந்த், 35, தாதகாப்பட்டி கிருஷ்ணகுமார், 45, பெங்களூரு மஞ்சுநாதன், 40, ஆகியோர் கைகோர்த்தனர். பின், 'சேலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விலைக்கு உள்ளது. அதில், நில அளவீடு தொடர்பான பிரச்னை இருப்பதால், அதை சரி செய்து கொடுத்தால், கமிஷனாக பல லட்சம் ரூபாய் பெறலாம்' என சண்முக ராஜேஸ்வரனிடம் தெரிவித்துள்ளனர். அதை நம்பிய அவர், மதுரையில் இருந்து, 'வெர்னா' காரில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வந்து, லட்சுமணனுக்கு தகவல் கொடுத்தார். அவர் உள்பட நான்கு பேரும் வந்து, சண்முகராஜேஸ்வரன் வந்த காரிலேயே, இரவு, 11:00 மணி வரை சுற்றியபடி, பணத்தை திரும்ப கேட்டு மிரட்டி வந்தனர். இதனிடையே, சண்முகராஜேஸ்வரன் கடத்தப்பட்டது குறித்து, மனைவிக்கு தகவல் அனுப்பி உள்ளார். அவர், மதுரை போலீசில் புகாரளிக்க, சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேடினர். நேற்று காலை, 4:30 மணிக்கு, சண்முகராஜேஸ் வரனை, கரூருக்கு கடத்திச்செல்ல முயன்றபோது, திருச்சி பிரதான சாலையில், காரை சுற்றி வளைத்த போலீசார் சண்முக ராஜேஸ்வரனை மீட்டனர். அவரை கடத்திய, லட்சுமணன், ஆனந்த், கிருஷ்ணகுமார், மஞ்சுநாதனை கைது செய்தனர். அவர்கள் மீது ஆள்கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர்.

சண்முகராஜேஸ்வரனும் சிக்கினார்: சண்முக ராஜேஸ்வரனிடம், சேலத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக, சீலநாயக்கன்பட்டி, வேல் நகரை சேர்ந்த லட்சுமணன் மூலமாக, அறநிலையத்துறையில் டிரைவர் வேலைக்கு, சேலம், அம்மாபேட்டை காந்தி நகரை சேர்ந்த வெங்கடேஷ், 32, அவரது அக்கா பூங்கொடி, 32, வீராணம், வீமனூரை சேர்ந்த ஜலகண்டேஸ்வரன், 26, முறையே, 6.70 லட்சம், 3.30 லட்சம், ஏழு லட்சம் என, 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்ற சண்முக ராஜேஸ்வரன் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து மூவர் நேற்று அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார், சண்முக ராஜேஸ்வரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X