சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை தாக்கி 2 பேர் படுகாயம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
குடியாத்தம்: குடியாத்தம் அருகே, சிறுத்தை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே அனந்தகிரியை சேர்ந்தவர்கள் சக்திகுமார், 21, முரளிதரன், 24. இவர்கள் நேற்று காலை, 6:00 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் வெள்ளநீரை பார்க்க சென்றனர். அப்போது, புதர் மறைவிலிருந்த சிறுத்தை அவர்களை தாக்கியது. படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, வேலூர் அரசு

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, சிறுத்தை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே அனந்தகிரியை சேர்ந்தவர்கள் சக்திகுமார், 21, முரளிதரன், 24. இவர்கள் நேற்று காலை, 6:00 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் வெள்ளநீரை பார்க்க சென்றனர். அப்போது, புதர் மறைவிலிருந்த சிறுத்தை அவர்களை தாக்கியது. படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து குடியாத்தம் வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது பெய்த மழையால் குடியாத்தம் பகுதியில் நீர்நிலைகள் நிறைந்துள்ளன. தமிழக - ஆந்திரா மாநிலத்தில், பலமனேர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க சிறுத்தைகள் வந்து செல்கிறது. எனவே, வெள்ளநீரை பார்க்க செல்வோர் சிறுத்தை உள்ளதா என்பதையும் கவனித்து செல்ல வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X